நெல்லை-சென்னை பகல் நேர ரயில் இயக்க ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை

நெல்லை-சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர். நெல்லைக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிஷன் வந்தார். அவரை மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் உதவித்தலைவர் ஜனார்த்தனன், இணைச் Buy Viagra Online No Prescription செயலாளர் சொனா வெங்கடாச்சலம், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். பயணம் செய்யும் ரயில் பெட்டிகளில் எலி தொந்தரவை ஒழிக்கவேண்டும். கழிவறைகளில் சில சமயங்களில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வடக்கு பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கவேண்டும். ரயில்வே ஸ்டேஷன் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதி வாயில்களில் நடைமேடை நுழைவு சீட்டு வழங்க தானியங்கி இயந்திரங்கள் அமைக்கவேண்டும். நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கும், சென்னைக்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும். நெல்லை-சென்னை இடையே பகல் நேர ரயில் விடவேண்டும். நெல்லையில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆபீஸ் செல்வோரின் நலனுக்காக காலை 7 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேரவேண்டும். பகல் நேர பயணிகளின் நலனுக்காக குருவாயூர் மற்றும் அனந்தபுரி ரயில்களில் ஏசி சேர் கார் இணைக்கவேண்டும். வெகுதூரம் செல்லும் ஹாப்பா ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டி இணைக்கப்படவேண்டும். நெல்லை, தென்காசி இடையில் அகல ரயில்பாதை பணி சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவு பெறவில்லை. அந்த பணியை விரைவில் முடிக்கவேண்டும். நெல்லை-தூத்துக்குடியை நேரடியாக இணைத்து புதிய ரயில்பாதை அமைக்கவேண்டும். சென்னை-கன்னியாகுமரி இடையில் இரண்டு வழி ரயில்பாதை அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Add Comment