கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்இப்தார் விருந்து நிகழ்ச்சி

இப்தார் விருந்து நிகழ்ச்சி

13522019_489550264578056_289929964800386677_n
கடையநல்லூர் ஜுன் 25 நெல்லை மேற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் தவ்ஹீத் சகோதர்கள் ஆகியோர்க்கு தனியார் திருமணம மண்டபத்தில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செய்யது மசூது, ஜாஹீர் உசேன்,ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் நோன்பின் நோக்கம் குறித்து மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல் லுஹா, மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் பேசினர்இதில் மாநில செயலாளர்கள் நெல்லை யூசுப், செய்யது அலி மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொன்டனர்.

இறுதியில் மாவட்ட துனைச்செயலாளர் அஹ்மத் நன்றி கூறினார்.

Add Comment