நெல்லை மாவட்ட தொகுதிகள் காங்., பிரமுகர்கள் ஆர்வம்

நெல்லை மாவட்டத்தில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் “சீட்’ கேட்டு காங்., பிரமுகர்கள் ஆர்வத்துடன் மனு அளித்துள்ளனர். சட்டசபைத்தேர்தலில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மனு அளித்தனர். இரண்டாம் நாளாக இன்றும் கட்சிப்பிரமுகர்கள் மனு அளிக்கவுள்ளனர். நான்குநேரி தொகுதிக்கு “சிட்டிங்’ எம்.எல்.ஏ., வசந்தக்குமாருக்கு சீட் கேட்டு அவர் ஆதரவாளர்கள் Buy Doxycycline மனு அளித்தனர். கடையநல்லூர் தொகுதிக்கு “சிட்டிங்’ எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸிற்கு சீட் கேட்டு அவர் ஆதரவாளர்கள் மனு அளித்தனர். நெல்லை ஜூவல்லரி உரிமையாளர் ஒருவரும் மனு அளித்துள்ளார். வாசுதேவநல்லூர் (தனி) தொகுதிக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்., தலைவர் சுந்தரராஜப்பெருமாள், வக்கீல் ராமேஸ்வரன், கணேசன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வெள்ளப்பாண்டியும் மனு அளிக்கவிருப்பதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ராதாபுரம் தொகுதிக்கு சேவாதளம் சாந்தி மங்களம், செல்வராஜ், நெல்லை பார்லிமென்ட் தொகுதி இளைஞர் காங்., தலைவர் வி.பி.துரை மனு அளித்துள்ளனர்.

விசுவாசிகளுக்கு வாய்ப்பு : காங்., நிர்வாகிகள் கூறும்போது, “”திமுகவிடம் “சீட்’ பெறுவதில் கட்சிமேலிடம் காட்டிய கண்டிப்பு இம்முறை வேட்பாளர்கள் தேர்விலும் பின்பற்றப்படும். வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என தலைவர்கள் கூறுகின்றனர். போட்டியிட மனு அளித்தவர்களின் பட்டியல் டில்லிக்கு அனுப்பப்பட்டு தீவிர பரிசீலனை நடக்கும். அதன் பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்பதால் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தனர். மனு அளித்தவர்கள் சென்னையில் முகாமிட்டு “சீட் பெற வழியுண்டா’ என தத்தம் அணி பிரமுகர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

Add Comment