கடையநல்லூரில் விபத்து 4 பேர் பலி 20 பேர்படுகாயம்

கடையநல்லூரில் விபத்து 4 பேர் பலி 20 பேர்படுகாயம்

IMG-20160626-WA0015

ஜுன் 26 கடையநல்லூர் குமந்தாபுரம் அருகே இரண்டு பைக்கு மீது வேன் மோதியது

பைக்கில் வந்த வடகரையை சார்ந்த இஸ்மாயில்(30)சிராஜுத்தீன்(27)முத்துசாமி புரம் மஹராஜா(33)மேலக்கடையநல்லூரை சார்ந்த முத்து நாரயணசாமி(35) சம்பவம் இடத்தில் இறந்தனர் பைக்கில் வந்த சேக்முகம்மது முட்டு சிப்பி கழண்டு கால் ஒடிந்து படுகாயம் அடைந்தார்

வேனில் பயணம் செய்த மதுரை சிம்மக்கல் பழக்ககடை சங்கம் சார்பில் குற்றாலம் வந்து குளித்து விட்டு மதுரை நோக்கி திரும்பும் போது குமந்தாபுரம் அருகே வேன் வரும்போது எதிரே இரண்டு பைக்கும் வேகமாக வருவதை பார்த்த வேன் டிரைவர் பிரேக் போட்டதில் வேன் கவிழ்ந்தது இதில் உள்ள 19 பேர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர் விபரம் முருகன்(52), நாரயணன்(40), செல்வம்(38), மாரிமுத்து(52) ,முருகன்(22) மாரிமுத்து(30), ராஜேஷ்(33) மற்றோர் ராஜேஷ்(31) , கணேஷ்(22)ஆகியோர் படுகாயடைந்தனர் இவர்களை மதுரை, திருநெல்வேலி மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் பைஷல் தலைமையில் Tntj தொண்டகள் மீட்ப்பு பணியில் ஈடுபட்டனர்
Mla அபூபக்கர் பார்வையிட்டார்

அப்போது அங்கு வந்த
தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ்,கடையநல்லூர் தாசில்தார் நாகராஜ் ஆகியோர்களிடம் சம்பவ நடந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட காயபட்ட சேக்முகம்மது வின் மூட்டு சிப்பியை மாவட்ட தலைவர் பைஷல் கொடுத்து மருத்துவர்களின் அலச்சியதை எடுத்து கூரினார் உடனே சப் கலெக்டர் அருகே உள்ள பழக்கடைக்கு சென்று ஐஸ் வாங்கி பதப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் மூலமாய் நாகர்கோவில் மருத்துவமனைக்கு தனியாக விழுந்து கிடந்த மூட்டு சிப்பியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்ததார்.

படம் செய்தி குறிச்சி சுலைமான்

IMG-20160626-WA0019 IMG-20160626-WA0020 IMG-20160626-WA0018 IMG-20160626-WA0017 IMG-20160626-WA0016

Add Comment