கடைய நல்லுர் அரசு மருத்துவ மனைக்கு பூட்டு போடும் போராட்டம்

FB_IMG_1467086112273கடைய நல்லுர் அரசு மருத்துவ மனைக்கு பூட்டு போடும் போராட்டம்

கடையநல்லூர் ஜுன் 27 அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் வருகின்ற29/6/16 புதன் மாலை 4 மணிக்கு பூட்டு போடும் போராட்டம்
நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு.

கடையநல்லூர் காவல் எல்கைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு மக்கள் உயிர்கள் பலியாவது வழக்கமாகி விட்டடது இதற்கான காரணம்
போக்கு வரத்து விதிகளை மீறும் இரு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்களை கண்கானிக்க வலியுறுத்தியும் 50 ஆண்டு காலம் பழமையான மருத்துவமனையில் விபத்து காலங்களில் போதிய மருத்துவர்கள் ,இல்லை விபத்து பிரிவு இல்லாததும் எழும்பு முறிவு டாக்டர் கிடையாது எக்ரே இல்லாததால் மக்களுக்கு பயன்படாத மருத்துவமனையை இலுத்து மூடும் போராட்டத்தை அறிவித்தது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகளின் கூட்டம் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது இதில் அ னைத்து கிளை நிர்வாகிகள்.
கலந்துகொன்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது கடைய நல்லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வாகண விபத்தில் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர் இந்த பகுதியில் விபத்து ஏற்பட்ட உடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டி உள்ளது அப்படி செல்லும் போது அரசு மருத்துவமனையில் எந்த விதமான உயிர் காக்கும் ஏற்பாடுகளும் இல்லை குறிப்பாக அவசர பிரிவு இங்கு அவசியம் ஆனால் இங்கு முதல் உதவி பிரிவு கூட முறையாக செயல்படவில்லை இதனால் விபத்து ஏற்பட்டவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாமாக உயிர் இழப்பது மிகுந்த கவலை அளிக்கிறது

இது மக்கள் திரள் போராட்டம் அனைவரும் வாரீர் அழைக்கிறது Tntj நெல்லை மேற்கு மாவட்டம்.

Add Comment