இந்திய குற்றவியல் சட்டத்தின் அவலநிலை!

இந்திய குற்றவியல் சட்டத்தின் அவலநிலை!

 

இரயில்வே நிலையத்தில் படுகொலை நடந்த போது பொதுமக்கள் தடுக்கவில்லை குற்றவாளியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறுகிறார்கள்..

ஒருவேளை நான் அங்கு இருந்து கொலையை தடுத்து குற்றவாளியை காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தால் என்ன நடக்கும்???

கா.துறை என்னை சாட்சியாக சேர்க்கும். நான் கோர்ட், கா.நிலையம், வீடு என நாயாக அலைவேன். 15 நாளில் அவன் ஜாமினில் வெளியே வருவான்.

என் வீட்டு விலாசத்தை கா.துறையே கொடுத்து அனுப்பும்.

அவன் என்னை விலை பேசுவான் அல்லது மிரட்டுவான்.

நான் நீதி, நேர்மை, மண்ணாங்கட்டினு சொன்னால் நான் நடு ரோட்டில் படுகொலை செய்யபடுவேன்.

கா.துறை வேறு ஒரு கேனை சாட்சியை தேடும். என் குடும்பம் நடு ரோட்டில் பிச்சை எடுக்கும். அவன் 15 நாளில் ஜாமினில் வெளியே வருவான்.

மாற்ற வேண்டியது மக்களை மட்டுமில்லை செத்து போன சட்ட நீதிகளையும் தான்….

Add Comment