சுவாதி கொலையாளி என உலாவரும் புகைப்படத்தை நம்ப வேண்டாம்!

சமூக வலைதளங்களில் சுவாதி கொலையாளி என உலாவரும் புகைப்படத்தை நம்ப வேண்டாம்!

சமூக வலைதளங்களில் சுவாதி கொலையாளி என உலாவரும் புகைப்படத்தை நம்ப வேண்டாம்!

சுவாதி கொலையாளி இவர்தான் என சமூக வலைதளங்களில் வெளிவரும் புகைப்படத்தை நம்ப வேண்டாம் என, நியூஸ் 7 தமிழ் கேட்டு கொள்கிறது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியை கொலை செய்தவர் பிலால் மாலிக் எனக் கூறி, ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அவர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும், சுவாதி கொலை வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அது மட்டுமல்லாமல், சுவாதி கொலை செய்தவரின் பெயர் பிலால் மாலிக் தான் என காவல்துறை உறுதிபடுத்தவில்லை என்ற நிலையில், இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி. சேகர் போன்ற பிரபலங்களே இவ்வாறான செய்திகளை பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின் வந்த கண்டனங்களை தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரன் மன்னிப்பு கோரினார்.

சுவாதியின் கொலை குறித்து வந்திகளை நம்ப வேண்டாம் என நியூஸ் 7 தமிழ் கேட்டு கொள்கிறது. இது போன்ற வதந்திகள் மத நல்லிணக்கதை கெடுக்கும் சில சமூக விரோதிகளின் செயல்பாடு என்பதால், அதனை யாரும் நமப வேண்டாம் என கேட்டு கொள்கிறது நியூஸ் 7 தமிழ்.

வதந்திகளை நம்பவேண்டாம்!

Add Comment