எச் ராஜா, நடிகர் ஒய்ஜி மகேந்திரன் வகையறாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

FB_IMG_1467442615732ஐடி இளம்பெண் ஸ்வாதி படுகொலையில் குறிப்பட்ட மதத்தைத் தொடர்புப்படுத்திப் பேசிய எச் ராஜா, நடிகர் ஒய்ஜி மகேந்திரன் வகையறாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நிச்சயமாக நாமும் ஒட்டு மொத்தமாக ஒற்றுமையுடன் அவர்களின் இந்த நடவடிக்கையை ஆதரிப்போம். ஒரு இஸ்லாமியனாக ஓய்ஜீ எமது பசித்து நோன்பு காக்கும் சமுதாயத்தை கொலைக்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியதையும், அதன் பின்னர்”அந்த நிலைத்தகவலின் கருத்து எனக்கு சரி எனப் பட்டதால் நான் பகிர்ந்தேன் அதில் தவறில்லை” என சொன்னதையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
வேண்டுமானால் நீதிமன்றத்தில் அவர் மன்னிக்கக் கோரட்டும். இந்த நாட்டில் அனைத்து மத இன மக்களுக்கும் பொதுவான சட்டம் ஒன்று இருக்குமானால் அவர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும்,. இது கண்டு இனி யாரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என இஸ்லாமியர்களை கொலையாளி என போகிறபோக்கில் களங்கம் சுமத்துவது நிறுத்தப்பட்டாக வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment