தென்காசி பகுதியில்வாகன சோதனை தீவிரம்

தென்காசி பகுதியில் தீவிர வாகன சோதனை நடந்தது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் சார்பில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி பகுதியில் தேர்தல் அலுவலர் காங்கேயன் கென்னடி, டி.எஸ்.பி.ஸ்டாலின், உதவி தேர்தல் அலுவலர்கள் விஜயா, மணிபாபு, கிருஷ்ணவேணி, இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வாகனங்களில் buy Viagra online கணக்கில் இல்லாமல் அதிகளவு பணம் கொண்டு செல்லப்படுகிறதா? முறைகேடாக பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினர். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கோட்டை அருகே புளியரை செக்போஸ்ட் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றன. இந்த வாகனங்களில் பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து டி.எஸ்.பி.ஸ்டாலின் தலைமையில் போலீசார் புளியரை செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

Add Comment