சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு

சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணண் (32), சிவகங்கை எஸ்.பி., முயற்சியால் மீட்கப்பட்டார். இங்கு கார் டிரைவாக இருந்த இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, காரைக்குடியில், கடந்த பிப்ரவரியில் ஆப்பரேஷன் நடந்தது. வருமானம் இல்லாததால், வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தார். இதற்காக திருப்புத்தூர் தென்கரையை சேர்ந்த சின்னையாவிடம், 1.05 லட்ச ரூபாய் கொடுத்தார். மன்னார் குடியை சேர்ந்த மணிகண்டன் மூலம், ஏப்., 21 ம் தேதி, டிரைவர் பணிக்காக குவைத் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு பணி வழங்காமல் இழுத்தடித்தனர். அங்குள்ள ஏஜன்ட்களை தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரை சவுதி அரேபியா அனுப்பி வைத்தனர். அங்கு ஒட்டகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினர்; Cialis online குடிநீர் கூட கொடுக்கவில்லை. இதனால், சிறுநீருடன் ரத்தம் வெளியேறியது. தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு, ஒட்டகங்களின் உரிமையாளர் கபில் என்பவரிடம் முறையிட்டார். “என்னிடம் பணம் வாங்கி கொண்டு உன்னை விற்று விட்டனர்,’ என கபில் கூறியுள்ளார். இதுகுறித்து மனைவி நித்யாவிடம், ராஜேஷ்கண்ணன் விபரம் தெரிவித்தார். எஸ்.பி., யிடம் புகார்: கணவரை மீட்டு தருமாறு, எஸ்.பி., ராஜசேகரனிடம், நித்யா மனு அளித்தார். ஏஜன்டாக செயல்பட்ட சின்னையா, மணிகண்டனிடம், இன்ஸ்பெக்டர்கள் மங்களேஸ்வரன், பெரியகருப்பன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அவரை திருப்பி அனுப்பினர். நேற்று அவர் சொந்த ஊர் வந்தார்.

Add Comment