கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் தொழுகை

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகை.

ஷவ்வால் பிறை குமரி மாவட்டத்தில் தென்பட்டதையடுத்து ஐந்து இடங்களில் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பபட்டது கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சார்ந்த  ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஜாதிப் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை  வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது  என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் &பஜார் &மதீனாநகர் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், குறிச்சி சுலைமான், துராப்ஷா, அஜீஸ், பாதுஷா ,குத்தூஸ் ,அப்துல்காதர்,உஸ்மான்,சதாம்உசேன்
மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் மாவட்டபேச்சாளர் காதர் ஒலி ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் அப்துல்காதர் 8வது தெரு தவ்ஹீத் திடலில் அப்துல் ஸலாம் , மக்கா நகர் தவ்ஹீத் திடலில்  அப்துல் அஜீஸ், ஆகிய இடங்களில் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும்நடைபெற்றது
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம்மாக அரிசி வழங்கப்பட்டது. தென்காசி சப் கலெக்டர் (பொறுப்பு) சேக் மைதீன் உத்தரவின் பேரில் கடையநல்லூர் தாசில்தார் நாகராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்  ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, தனிபிரிவு உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

FB_IMG_1467774252210 FB_IMG_1467774256896 FB_IMG_1467774260748 FB_IMG_1467774264668

Add Comment