தாலூகா அலுவலகத்தை நகரின் மையபகுதியில் அமைக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

தாலூகா அலுவலகத்தை நகரின் மையபகுதியில் அமைக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சர்வகட்சி கூட்டத்தில் முடிவு

கடையநல்லூர் புதிய தாலுகா கட்டிடம் புதியகல்லூரி கட்டிடம் சம்பந்தமாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர் தலைமையில் நடை பெற்ற சர்வகட்சி கூட்டத்தில்
எடுக்கப்பபட்ட தீர்மானம்
இதில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலூகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திலேயே அல்லது அதற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டவேண்டும் ஆனால் மாவட்ட நிர்வாகம் மிருகங்கள் வாழும்  சமுக வன அடந்த காட்டுப்பகுதிக்கு   (38 ஏக்கர்  காட்டு புறம்போக்கு) தாலுகா கட்டிடம்  கொண்டு செல்வது பொதுமக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் அரசு கருவூலத்திற்கும் பாதுகாப்பு இல்லை ஆகவே இந்த இடத்தை கைவிட வலியுறுத்தி
முதலமைச்சரை சந்தித்து மனு கொடுப்பது அத பின்னர் சட்டமன்த்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது கடைசியாக 32 வருவாய்கிராம மக்களை திரட்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது இக் ககூட்டத்தில் திமுக, காங்கிரஸ் ,தமாக ,கம்யூனிஸ்ட், மதிமுக ,பாஜக,. தேமுதிக ,புதிய தமிழகம், உட்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொன்டனர்.
IMG-20160709-WA0069IMG-20160709-WA0071

Add Comment