டாக்டர் ஜாகீர் நாயக்கை முடக்க முயற்சிப்பதை மத்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்

FB_IMG_1468294050797பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகீர் நாயக்கை முடக்க முயற்சிப்பதை மத்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை

சென்னை: பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகீர் நாயக்கை சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற தீவிரவாத செயல்களோடு தொடர்பு படுத்தி மத்திய அரசும்,அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் இந்திய முஸ்லீம்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இன்று(11.07.16)சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: டாக்டர் ஜாகீர் நாயக் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார்;அவர் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதத்தை ஆதரித்து பேசியதில்லை மாறாக தீவிரவாதத்தை எதிர்த்தே பேசி வந்து இருக்கிறார்;டாக்டர் ஜாகீர் நாயக் மீது அவதூறு பரப்பும் ஊடகங்கள் திராணி இருந்தால்,அவர் தீவிரவாதத்தை ஆதரித்து பேசியதற்கு ஒரு ஆதாரத்தையாவது தர முடியுமா?;மத்திய அரசு ஜாகீர் நாயக்கை முடக்க நினைக்கும் முயற்சிகளை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்;அவர் மீது அடக்குமுறைகள் தொடருமேயானல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்; என கடுமையாக எச்சரித்தார்.அனைத்தும் பத்திரிக்கையாளர்களுக்கும் டாக்டர் ஜாகீர் நாயக் பேசிய இரண்டு சீடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இப்பேட்டியின் போது மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர்,பிர்தவ்ஸ்,முஹம்மது ஷிப்லி,தக்வா மைதீன் மற்றும் தென்சென்னை,வடசென்னை,காஞ்சி,திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Add Comment