ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டினால் 50 லட்ச ரூபாய் பரிசு” – சாத்வி பிராச்சியின் வெறிப் பேச்சு

“ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டினால் 50 லட்ச ரூபாய் பரிசு”
– சாத்வி பிராச்சியின் வெறிப் பேச்சு…

வெறிப் பேச்சு பேசுவதற்கென்றே சங்பரிவாரங்கள் சிலரை நேர்ந்து விட்டிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் இந்த சாத்வி பிராச்சி.

“முஸ்லிம்கள் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்று வெறித்தனமாக முன்பு பேசினார்.

இப்போது ஜாகிர் நாயக் தலையை வெட்டி வருபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்கிறார்.

சமூக நல்லிணக்க அடிப்படையில், கண்ணியமான முறையில் இஸ்லாமிய அழைப்பியல் சேவையில் ஈடுபடும் டாக்டர் ஜாகிர் நாயக் மீது விசாரணை..போலீஸ் கெடுபிடிகள்..வழக்குகள்..

இதோ, வெறித்தனத்தின் மறு உருவாக விளங்கும் பிராச்சி மீது எந்த நடவடிக்கையும் இல்லை…ஒரு கண்டனம் இல்லை..ஒரு முணுமுணுப்புகூட இல்லை.

“இந்து மதமும் இஸ்லாமும் அன்பின் அடிப்படையில் கைகோக்க வேண்டும்” என்று கூறும் இஸ்லாமிய அழைப்பாளர் மீது தீவிரவாதப் பழி சுமத்தி நடவடிக்கை..

முஸ்லிம் மத போதகரின் தலையை வெட்டிக் கொண்டுவந்தால் 50 லட்சம் ரூபாய் பரிசு என்று வெளிப்படையாக பேட்டி அளிப்பவர் மீது எந்த வழக்கும் இல்லை.

இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?

-சிராஜுல்ஹஸன்

Add Comment