கடையநல்லூர் தொகுதியில் முஸ்லிம் லீக் தனித்து போட்டி: வேட்பாளர் அறிவிப்பால் பரபரப்பு

கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் 3 தொகுதிகளை பெற்றிருந்த போதிலும் கடையநல்லூர் தொகுதியில் முஸ்லிம் லீக் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளதால் திமுக கூட்டணியில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகள் வழங்கப்பட்டு அதன்பிறகு அவற்றில் ஒன்று காங்., கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மத்தியில் பெரும் அதிருப்தியான நிலை காணப்பட்டது. மீண்டும் 3 தொகுதியை ஒதுக்கிட வேண்டுமென்ற கோஷம் அக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் எழுப்பபட்டது.இந்நிலையில் online pharmacy no prescription இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக தலைவருமான முதல்வர் கருணாநிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இத்தகைய நிலையில் நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அதன் அடிப்படையில் 5 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போது ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் கடையநல்லூர் தவிர ஏனைய தொகுதிகளில் வேட்பாளர்கள் தற்போது நிறுத்தப்படவில்லை. ஆனால் கடையநல்லூர் தொகுதியில் மட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஹிதாயத்துல் இஸ்மாயில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் சுலைமான் சேட் வடகரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-“”தென்மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணித்து வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்து செங்கோட்டை ஒன்றிய நகர தலைவராக இருக்கும் ஹிதாயத்துல் இஸ்மாயில் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம். மேலும் நாளை (இன்று) காலை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் சாகுல்ஹமீது, முகம்மது இப்ராஹிம், சாகுல்ஹமீது, இஸ்மாயில், சலீம், மவுலவி ரகுமத்துல்லா, செய்யது ஒலி, துணைத் தலைவர் முகம்மது அசன், முகம்மது மீரான், முகம்மது அவுலியர், அக்பர்பாதுஷா, பஷீர், ராஜாமுகம்மது உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை நகர துணைதலைவர் சர்தார் நன்றி கூறினார்.கடையநல்லூரில் திமுக தொகுதியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளரை அறிவித்து இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளதால் திமுக கூட்டணியில் பெரும் குழப்பமான நிலை காணப்பட்டுள்ளது.

Add Comment