கடையநல்லூர் தொகுதியில் கட்சி கொடிகள் அகற்றம்

கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பை அடுத்து அரசியல் கட்டி கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கொடிக் கம்பங்களில் வெள்ளை நிற பெயிண்ட் பூசும் பணி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்புகள் நாளுக்கு நாள் அரசியல் கட்சிகளுக்கு பெறும் அதிரடியாக இருந்து வருகிறது. சுவர் விளம்பரங்கள், தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்டவைகளுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ள தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை தற்போது அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து தொகுதிகளிலும் அரசு அலுவலகங்கள், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களிலிருந்து கொடிகளை அகற்றுமாறு தெரிவித்ததுடன் கொடிக்கம்பங்களில் அரசியல் கட்சிகளின் வண்ணங்களையும் அளித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடையநல்லூர் தொகுதியில் அரசியல் கட்சிகளுக்கு கொடிகளை அகற்றிட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் தாமாகவே முன்வந்து கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை எடுத்து செல்கின்றனர். மேலும் அரசியல் கட்சிகளின் கலர்கள் தெரியாத வகையில் வெள்ளை நிற பெயிண்டுகளும் கொடிக்கம்பத்தில் அடிக்கப்பட்டு வருகின்றன. கடையநல்லூர் தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரன், உதவி தேர்தல் அதிகாரியும் செங்கோட்டை தாசில்தாருமான சிவகாமி ஆகியோர் ஆலோசனையின்படி வருவாய்த்துறையினர் இதற்கான கண்காணிப்பை Buy Doxycycline மேற்கொண்டுள்ளனர்.

Add Comment