கடையநல்லூர் அருகே முந்தல் காடு பகுதியில் பயங்கர காட்டுத் தீ

IMG-20160717-WA0023 கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் முந்தல் காடு பகுதியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பயங்கர காட்டுத் தீ தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தினரல்
புளியங்குடி வனச்சரகம், டி.என்.புதுக்குடி பீட்டிற்குள்பட்ட சேம்பூத்துநாதர் கோயில் பகுதியில் பரவிய தீ, காற்றின் காரணமாக வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, புளியங்குடி மற்றும் கடையநல்லூர் வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர்கள் சிவகுருநாதன், அருமைக்கொடி ஆகியோர் தலைமையில் 50 பேர் அப்பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.

காற்று வீசும் திசை மாறும் வாய்ப்புள்ளதால், கடையநல்லூர் வனச்சரகத்துக்குள்பட்ட மலைப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க கடையநல்லூர் வனச்சரகர் பாலேந்திரன் தலைமையில் வனத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைப் பகுதிக்கு சென்றவர்கள் சிகரெட், பீடி பிடித்துவிட்டு எறிந்த தீக்குச்சியால் அங்குள்ள கோரைப் புற்களில் தீப்பிடித்து பரவியிருக்கலாம் என வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

செய்தி குறிச்சி

Add Comment