வெற்றிக்கு கைகொடுப்பேன்: சவுரப் திவாரி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,” என ஜார்க்கண்ட் மாநில ரஞ்சி அணி கேப்டன் சவுரப் திவாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில், ஆசிய கோப்பை online pharmacy without prescription கிரிக்கெட் தொடர் வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் 3வது ஐ.பி.எல்., தொடரில் அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் சவுரப் திவாரி, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து, இந்திய அணியில் இடம் பிடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதல் வீரராக கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதனை கவுரவிக்கும் விதமாக ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் (ஜே.எஸ்.சி.ஏ.,), பாராட்டு விழா நடத்தியது.
இதில் பங்கேற்ற சவுரப் திவாரி கூறுகையில்,””ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவானது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க போராடுவேன். இதன்மூலம் என்னை தேர்வு செய்த அணி தேர்வாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பேன்,” என்றார்.

Add Comment