கடையநல்லூர் தொகுதியில் வேட்பாளர் முகம்மது முபாரக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்

கடையநல்லூர் தொகுதியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளராக முகம்மது முபாரக் (31) போட்டியிடுகிறார். இவர் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் Buy Ampicillin முகம்மது முபாரக் மேலப்பாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர். டி.எம்.இ படித்தவரான இவர் மேலஓமநல்லூரில் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். மாவட்டத்தில் பிற சட்டசபை தொகுதிகளில் காலை முதல் அதிகாரிகள் காத்திருந்தும் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. சில தொகுதிகளில் வேட்பு மனு படிவங்களை சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் பெற்று சென்றனர். நாளை (21ம் தேதி) முதல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (20ம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்களுக்கு 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு: >வேட்பு மனுத்தாக்கலையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள், கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீக்கடைகளையும் மூட உத்தரவிட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. சுயேச்சை சின்னங்கள்: >சட்டசபை தேர்தலில் சுயேச்சைகளுக்கு 53 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது.

Add Comment