கடையநல்லூர் மலாம்பாட்டை பகுதியில் கொசுக்கடியால் அவதியுறும் மக்கள்

FB_IMG_1468820026687

கடையநல்லூர் மலாம்பாட்டை பகுதியில் மக்கள் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.உடனியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி அந்த பகுதியையே சேர்ந்த ஒருவர் தனது கருத்தினை முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளார்.சமூதாய இயக்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு நோய் பரவும் அபாயத்திலிருந்து அந்த பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும்.

இது அவரின் பதிவு…
அஸ்ஸலாமு அலைக்கும் …
நான் கடையநல்லூர் மலம் பாட்டை ரோடு ( 31 வார்டு) இருக்கிறேன். இங்கு தொடர்ந்து 1 வாரமாக கொசு தொல்லை தாங்க முடியவில்லை.இதனால் இரவில் தூங்க முடியவில்லை.இதனால் குழந்தைகளுக்கு டெங்கு,மலேரியா,போன்றவை வர வாய்ப்பு அதிகமா உள்ளன.இதனால் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த தகவலை முகநூலின் வாயிலாக சொன்னால் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கபடும் என்று நினைக்கிறேன்.இதனை வாசிக்கும் நல்லூர் வாசிகள் அனைவரும் இந்த தகவலை பகிருங்கள.இதன் வாயிலாக நகராட்சியில் இருந்து தக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று நினைக்கிறேன் ..
Havoc Sadham Usain

Comments

comments

Add Comment