கடையநல்லூரில்க ல்வி உதவித் தொகை வழிகாட்டுதல் முகாம்

கல்வி உதவித் தொகை வழிகாட்டுதல் முகாம்

கடையநல்லூர் ஜுலை 18 கடையநல்லூரில்
ஹாஜி பீர் முஹம்மது ஸாகிப் நினைவு கல்விச் சங்கம் சார்பில் மத்திய அரசால் நிறுவபட்ட மெளலான அபுல் கலாம் ஆஸாத் கல்வி கழகத்தின் சார்பாக பைஜீல் அன்வார் அரபிக் கல்லூரியில் வைத்து கல்வி உதவித் தொகை (Rs.12000) பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் கல்வி சங்கத்தில் செயலாளர் மொகைதீன் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறுபான்மை சமுகத்தை சார்ந்த மாணவ மாணவியர்களின் கல்வி யின் அவசியத்தை பற்றி விரிவாக பேசினார். விழா ஏற்பாட்டை ஹாஜி.பீர்முஹம்மது செய்தார், ரொட்டரி பப்ளிக் வக்கீல் முஹம்மது ரஃபிக், முஹம்மது ஹீசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – ன் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால், நகர தலைவர் செய்யது மசூது, கைதர் அலி, ரஹம்மதுல்லா , பாட்டபத்துகடாஃபி கலந்து கொண்டனர்.

செய்தீ குறிச்சி
IMG-20160718-WA0020IMG-20160718-WA0019

Add Comment