கடையநல்லூர் திமுகவில் வலுவடையும் கோஷ்டி பூசல்

சமீபத்தில் கடையநல்லூர் நகர சொல்வீர்கள் கூட்டம் சேனைத்தலைவர் மண்டபத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் கடையநல்லூர் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன், கடையநல்லூரில்  கோஷ்டி பூசல் மற்றும் இரு வேறு அணிகள் கிடையாது என்பதை வலியுறுத்தி பேசினார்.

13731537_1648323382156663_307166690303186288_n

13754651_1648323442156657_8368681229132317624_n
இதற்கு போட்டியாக கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளர் முஹம்மது அலி தலைமையில்  லைஞர் பகுத்தறிவு பாசறையின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த இரண்டு கூட்டங்களின் முடிவாக என்ன நடந்தது.ஒவ்வொரு கோஷ்டியிலும் உள்ள திமுக தொண்டர்கள் தன்னுடைய தலைமையயை நியாபடித்தியும் எதிர் கோஷ்டியினை திட்டியும் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை பார்க்க முடிந்தது.

இதை இங்கே முகமது அலியின் ஆதரவாளர் பதிந்துள்ள கருத்து…  

கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளரும், நெல்லை மேற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான சே அ. முகமதலி அவர்களை திமுகவில் இருந்து நீக்கிட இப்போது நகர செயலாளர் மற்றும் நகர்மன்ற தலைவரின் கணவரும் போலி கையெழுத்து வாங்கி வருவதாக செய்திகள் வருகின்றன.

40 ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கத்திற்காக உழைத்து அனைத்தையும் இழந்து. திமுக என்ற சொத்தையே தன் வசம் வைத்துள்ள முகமதலி அவர்களை நெல்லை மாவட்டம் மற்றுமல்ல தலைவரும் தளபதி அவர்களுமே நன்கு அறிவர்.

நடந்து முடிந்த தேர்தலில் அவரது உழைப்பு . வியூகம் ஆகியவற்றை தோழமை கட்சிய மு லீக் மற்றும் ச.ம.உ.அபூபக்கர் அவர்கள் நன்கு அறிவர்.

ஆகவே மாவட்ட திமுக செயலாளர் மற்றும் தலைவர் . தளபதி ஆகியோர் இப்படி பட்ட போலிகளை களை எடுத்து தொண்டனையும் நமது இயக்கத் தையும் காத்திட ஒரு தொண்டனாய் வேண்டுகிறேன்.

போட்டி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பதிலடியாக தற்போதைய திமுகவின் நகர செயலாளர் சேஹனாவின் ஆதரவாளர் பதிந்துள்ள பதிவு.

கடையநல்லூரில் கானாவின் ரசிகர்மன்றம் ஒன்று கட்சி பணிகளை முடக்கிகொண்டு இருக்கிறது. இதை மாவட்ட செயளாலர் அண்ணாச்சி பொ. சிவபத்மனாதன் அவர்களுக்கு எடுத்துசெல்ல வேண்டும். சமீபத்தில் நடந்த கடையநல்லூர் நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயளாலர் கலந்து கொண்டார்.

இந்த போலி கும்பல் கீழ்தரமாக செயல்பட்டு முடக்க நினைதனர். ஒவ்வொரு கழக நிர்வாகிகளுக்கு போன் செய்து செல்லவேண்டாம் என்றனர். நமது கழக தொண்டர்கள் இவர்களின் பொய் பித்தலாட்டம் போலித்தோற்றம் அறிந்தவர்கள் அவர்களின் முகத்தில் கறியை பூசினர் செயல்வீர்ர்கள் கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தினர்.

கழகத்தின் செயல்வீர்ர்கள் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று சொல்வது கழகத்தின் வீதிகளைமீறி செயல்படுவதாகும். இவர்களை இப்படியேவிட்டால் கழகத்தின் வெற்றியை பாதிக்கும் இதை தலைமனையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லவும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அதில் இரு கோஷ்டிகள் இருக்கும். அதற்கும் மேலாக பல மாவட்டங்களில் தலைமையே கோஷ்டிகளை உருவாக்கும்.ஏனென்றால் ஒரு கோஷ்டி பிறந்தால் இன்னொரு கோஷ்டி கட்சியில் நிலைக்கும் என்பதால்.இதனால்தான் என்னவோ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியயை திமுகவிற்கு ஒதுக்கவில்லை.

ஆனா ஒன்னுங்க மக்களே, இந்த கால சூழ்நிலையில் கட்சிக்கு மாடாய் உழைக்கும் தொண்டனைவிட காசை வாரி இறைக்கும் தொண்டனையே மக்கள் விரும்புகிறார்கள்.

இதில் யார் பக்கம் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை வருகிற உள்ளாட்சி தேர்தலில் பார்த்து விடலாம்.

Add Comment