அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்த வாகனத்தில் சென்ற தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

மகாராஷ்டிர மாநிலத்தில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற தலித் இளைஞர்களை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீடு பகுதியில் உள்ள சவர்கான் கிராமத்தில் 6 தலித் இளைஞர்கள் மூன்று இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த சிலரை அவர்கள் முந்திச் செல்ல முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் தலித் இளைஞர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்தைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டிய அவர்கள் இரு தலித் இளைஞர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Add Comment