கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

நெல்லை கருப்பசாமி பாண்டியன் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன். அங்கு (திமுக) எனது உழைப்பை மதிக்காமல் வஞ்சம் தீர்த்து, அவமானப்படுத்தி வெளியே அனுப்பினர்.

இப்போது, தவறை உணர்ந்து அதிமுகவில் தொண்டனாகப் பணியாற்றக் காத்திருக்கிறேன். அதிமுகவில் இணைய விண்ணப்பித்து இருக்கிறேன். அனுமதி கிடைத்துவிட்டால் வரும் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவை வீழ்த்த பாடுபடுவேன் என்று கூறினார் திமுக என்பது கட்டுப்பாடு இல்லாத இயக்கம். ஆனால், அதிமுக ராணுவ கட்டுப்பாடு மிக்க இயக்கம் என்றும் கூறினார்.

சட்டசபை தேர்தலின் போது கட்சியில் இணைய அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஜெயலலிதாவிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு தொடர்ந்து கடிதம் அளித்து வந்தார் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன்.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இன்று சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, திருநெல்வேலி மாவட்டம், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. கருப்பசாமிபாண்டியன் இன்று நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற கருப்பசாமி பாண்டியன் கடந்த 15 ஆண்டு காலமாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே திமுகவில் இருந்து விலகிய பின்னர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது பல மாத காத்திருப்புக்குப் பின்னர் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

Add Comment