கடையநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பபட்டது கடையநல்லூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இண்டு மாதத்தில் மட்டும் தொடர் விபத்தினால் பல உயிர்கள் பலியாகிவிட்டது நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து விட்டனர் இதை தடுக்கும் விதத்தில் தமி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார்கிளை சார்பில் ஆஸ்பத்திரி பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதிளில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது சாலை விதிகளை மதிப்போம்!
விபத்துகளை தவிர்ப்போம்!
தலைகவசம் உயிர் கவசம்

40 தில் போய் நலமாய் வா
100 ரில் போய் 108 டில் வராதே
வேகம் குறைப்பீர் விபத்தை தவிப்பீர்

குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்
போதையில் வாகனம் ஓட்டுபவன் மனித வெடிகுண்டு போல் ஆவான்
தானும் செத்து பிறரையும் கொல்லுவான்

பெற்றோர்களே பிள்ளைகளை கொல்லாதீர்கள்
படிக்கும் வயதில் பறக்கும் பைக் உனக்கு எதற்கு

வேகம் குறைப்பீர் விபத்தை தவிப்பீர்

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திய படி நின்றனர் குற்றால சாரல் திருவிழா முடியும்வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சாலைபாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படும் இதன் மூலம் விபத்துகளை தடுக்க முயற்சிகப்பபடும்
இதில் மாவட்டபேச்சாளர் சதாம் உசேன், சாலைபாதுகாப்பு குறித்து பேசினார் இந் நிகழ்ச்சியில் கிளை தலைவர் குறிச்சி சுலைமான், செயலாளர் செய்யது, சுலைமான் ,துனை செயலாளர் உஸ்மான் மற்றும் பேட்டை கிளை தலைவர் மைதீன் மற்றும் மாணவர்அணி தொண்டரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20160731-WA0008

IMG-20160731-WA0007

IMG-20160731-WA0006

IMG-20160731-WA0005

IMG-20160731-WA0004

IMG-20160731-WA0003

Add Comment