ஒன்னுமே புரியல சிவா & சசிகலா புஷ்பா மேட்டர்ல…

என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது…
ஒன்னுமே புரியல சிவா & சசிகலா புஷ்பா மேட்டர்ல…

1. திமுக எம்.பி. திருச்சி சிவாவை பொது இடத்தில் வைத்து பளார் விட்ட அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா மீதுதான் முறையாக உடன்பிறப்புக்கள் கோபப்படனும் .
ஆனால் சிவாவை அடிச்ச சசிகலா புஷ்பாவை கண்டிச்சு நடவடிக்கை எடுத்த முதல்வர் மேல கோபப்பட்டு உடன்பிறப்புக்கள் முகநூலில் பொங்குறாங்க…

2.உண்மையிலேயே அதிமுக கட்சித் தலைவர் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி திமுக எம்.பி. சிவா தரக்குறைவா பேசியதால் தான் அதிமுக எம்.பி.சகிலா புஷ்பா அவரை அடித்திருந்தால் அதிமுக தலைமை அவர் விசுவாசத்தை மெச்சி உச்சி மோர்ந்திருக்க வேண்டும்.மாறாக அவரை திருப்பி அடித்திருக்க கூடாது.ஆனால் அதிமுக எம்.பி. புஷ்பா அதிமுக தலைமை தன்னை அடித்ததாக மீடியாவிலும், நாடாளுமன்ற மேல்சபையிலும் பேசியது ஏனோ நெருடுகிறது.

3. அடிவாங்கிய சிவாவிடம் மன்னிப்பு கேட்பதில் நியாமிருக்கிறது. ஆனால் அவர் சார்ந்திருக்கும் திமுக தலைமையிடம் தேவையில்லாமல் மன்னிப்பு கேட்ட்பது ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவில் துண்டு போட்டு வைக்க திமுக தலைமையிடமும் மன்னிப்பு கேட்டாரோ என்னவோ அவருக்கே வெளிச்சம்.

4. கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே சசிகலா புஷ்பா தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரோடு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று “வாட்சப்” பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய போது இவரை பற்றிய விஷயங்களை பொதுமக்கள் அறிந்துகொண்டார்கள்.

5.மேலும் இதே திருச்சி சிவாவுடன் இந்த சசிகலா புஷ்பா இணைந்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருவரின் மீதும் சந்தேகத்தை கிளப்பியது.
ஆகமொத்தம் இந்த இருவருக்குமிடையில் அரசியல் சண்டையை தாண்டி வேறு ஏதோ உட்பிரச்சினை இருக்கும்போல் தெரிகிறது. அதை மறைக்க அரசியல் போர்வை போர்த்துகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

கம்புளி முஹம்மது யாகூப்

Add Comment