கடையநல்லூர் தொகுதி மக்களின் குரல்

கடையநல்லூர் தொகுதி மக்களின் குரல்

கடைநல்லூர் தொகுதியில் தென்னை கூட்டுறவு சங்கம்,கொப்பரை உலர்கலன்கள் உருவாக்க வேண்டும்

சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை

தமிழ்நாடு சட்டபேரவை01.08.2016 அன்று நடைபெற்ற2016-2017 ஆம் ஆண்டின் செலவிற்க்கான கூட்டுறவு, உணவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அரசின் கொள்கை விளக்க பற்றி துறை அமைச்சர் இரா காமராஜ் பதிலுரைக்குப்பின்

இந்திய யூனியன் முல்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே,

கடையநல்லூர் தொகுதியில் 10,000 ஹெக்டேருக்கு மேல் தென்னை சாகுபடியாகிறது எனவே எனது தொகுதியில் தென்னை கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என்பதையும் கொப்பரை உலர் கலன்கள் அமைத்து விவசாயிகளுக்கு உதவிட இவ்வரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

எனது தொகுதியில் நியாய விலை கடைகளுக்கு பல இடங்களில் வெகு தூரம் செலவேண்டி உள்ளது மேலும் 1500 குடும்ப அட்டைக்கு மேல் இருக்கும் நியாய விலை கடைகளை பிரித்து மக்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Add Comment