அமைச்சரின் பேச்சுக்கு தமிமுன் அன்சாரி ஆட்சோபம் தெருவித்தாரா?

சபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மானியக் கோரிக்கையில் பேசும்போது ,பல மதக் கடவுள்களோடு முதல்வரை ஒப்பிட்டு பேசி,அத்தோடு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும் ஒப்பிட்டு பேசினார்.

அவர் பேசி அமர்ந்ததும் நானும்,முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கரும் இதற்கு ஆட்சேபனை செய்தோம்.இதை அவையில் இருந்த அதிமுக,திமுக,காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வளவு பேரும் பார்த்தார்கள்.

எங்கள் இருவரின் ஆட்சேபனையை ஏற்று அதை சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்.அதன் பிறகு அவை முடிந்ததும் நானும்,அபூபக்கரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சென்று அதன் விபரீதத்தையும்,கருத்தியல் தவறையும் விளக்கியதை அவர் ஏற்றுக் கொண்டார்.

நானும் அபூபக்கரும் இணைந்தே இவ்விஷயத்தில் பேசியதையும்,கருத்துக்களை பரிமாறிக் கொண்டதையும் அருகில் இருந்த விஜயதரணி(காங்கிரஸ்) ,கருணாஸ்(முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய இருவரும் கவனித்துக் கொண்டேயிருந்தனர்.

உண்மைகளை அறிய விரும்புபவர்கள் எனது நண்பர் அபூபக்கர் MLA விடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டுகிறேன்.

முஸ்லிம் லீக்கின் பத்திரிக்கையான மணிச்சுடரில் 3_08_16 அன்று இச்செய்தி பின்னணி தெளிவாக வந்திருக்கிறது. #எல்லாப்_புகழும்_இறைவனுகே!

ஆனால் எனது முன்னாள் சகாக்கள் உண்மைக்கு மாறான அவதூறை பரப்பி என் பாவங்களை குறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று சட்டமன்றத்தில் சிறைவாசிகளுக்காக நான் ஆற்றிய உரை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.அதை திசைத் திருப்பும் விதமாக அதற்காக இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்கள்.

தார்க்குச்சிகளால் நீலவானத்தை கிழித்து விட முடியாது.உமிழ் நீரால் எரிமலையை அணைத்து விட முடியாது. இறைவன் ஒருவருக்கு தரும் கண்ணியத்தை,மனிதர்களால் தடுக்க முடியாது.

எனது முன்னாள் சகாக்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.வயிறு எரியாதீர்கள்,பொறாமை கொள்ளாதீர்கள்.

பொறாமை என்பது விறகை நெருப்பு எரிப்பது போன்று அது ஈமானை அறித்து விடும் (நபி மொழி)

இந்த நபிமொழியை உணர்ந்து இனியாவது செயல்படுங்கள்.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். #இறைவன்_போதுமானவன்

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
03_08_16

Add Comment