எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற கடையநல்லூர் ஆசிரியரின் பிரியா விடை

பிரியாவிடை…

ஹாஜி ஷாஜஹான்.

கடையநல்லூர் அருகே உள்ள வடகரை அரசு பள்ளியில் மூத்த முதுகலை வேதியியல் வேதியல் ஆசிரியர்.
மற்றும் உதவித்தலைமையாசிரியரும் அவரே.பள்ளி மாணவ மாணவிகளிடம் மட்டுமல்லாமல் ச ஆசிரியர்களிடம் நற்பெயரை சம்பாதித்து அருப்புக்கோட்டை அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்று விடைபெறுகிறார்.அவரின் நல்ல நடத்தைக்கு கிடைத்த வெகுமதிதான் இந்த பதிவு.

வாழ்த்துவோம் நாமும் அவர்களுடன்.

சக ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பானவர்.
மாணவர்களின் மனதில் ஓர் நல்லாசிரியர்.
வேலை நாட்களில் வேதியியல் ஓதுவார்.
விடுமுறை நாட்களில் வேதவியல் ஓதுவார்.
இரண்டிலும் அவர் பணி அடிபிறழாது.
தலையில் குஃபி குல்லா தாடையில் தாடி.
அகமும் புறமும் அச்சு அசல் இசுலாமியர்.
இசுலாத்தின் மீது அசையா நம்பிக்கை.
அண்ணா மதநெறியாளர் மதவெறியாளர் அல்ல.
பிறர் அவரை மதிப்பதற்கு அப்பண்பே காரணம்.
தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுகிறார்.
எம் பள்ளியில் அன்னாரின் இறுதிப்பணிநாள்.
கனத்துடன் கரைந்தன கணங்கள் அன்று.
மாணவக் கண்மணிகளில் கண்ணீர்த்துளிகள்.
அனைவரும் ஆழ்மனதிலிருந்து வாழ்த்தினோம்
அவரவர் தெய்வத்திடம் மெய்யுருகத் தொழுதோம்.
அன்னாருக்கு நல்ல பள்ளி அமைய வேண்டினோம்.

பிரியாவிடையுடன் பாமராசிரியன்,
த.ரா.ச.இராமமூர்த்தி.

Add Comment