கடையநல்லூர் தாலுகா அலுவலகம் நகரின் மைய பகுதியில் அமைவது கஷ்டம்

நமதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சரின் மழுப்பல் பதில்

என்ன புரிகிறது
தாலுகா நகரின் மையபகுதியில் வருமா வராதா
கொஞ்ச சொல்லுங்கள் இதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன பதில் சொல்லும்

~~~~~~~~~~~~~~~~~~~~~
கடையநல்லூர் ஊர் எல்லையிலேயே தாலுகா அலுவலுகம் அமையும்
சட்டமன்றத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை அமைச்சர் பதில்

திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது அங்கே உள்ள Agriculture Marketting நிலையத்திற்கு சொந்தமான இடத்திலே இருக்கிறது. கடையநல்லூர் வட்டாட்சியிலே 32 வருவாய் கிராமங்களும், 2 நகராட்சிகளும் இருக்கின்றன. இதுவரை அங்கே சொந்தக் கட்டடம் இல்லாமல் இருக்கின்றது. எனவே, இந்த அலுவலகத்தை நகர எல்லையிலேயே, ஊருக்கு வெளியில் கொண்டு போகாமல் நகர எல்லையிலேயே அமைந்து கொடுக்க வேண்டுமென்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாயிலாக இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன். அதற்கு திட்டம் இருக்கின்றதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர்: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்,

மாண்புமிகு திரு ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன கடையநல்லூர் புதிய வட்டம் என்பது புரட்சி தலைவி அம்மா அவர்கள் 110 விதியின் கீ உருவாக்கித் தரப்பட்ட புதிய வட்டம். அது தற்போது வடாகைக் கட்டடத்திலே இயங்கி வருகிறது. அதை நகரத்தின் வெளிப்பகுதியிலே கொண்டு போகக்கூடாது என்கின்ற கோரிக்கையை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலே அங்கே இருக்கக் கூடிய நிலத்தை ஆய்வு செய்து, அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்கின்றார்கள். அந்த வகையிலே, நம்முடைய புதிய வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் அல்ல, அங்கே பல அரசு அலுவலக கட்டடங்கள் உருவாக்குகின்ற வகையிலே ஒரு இடத்தை பரிந்துரை செய்திருக்கின்றார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏற்கனவே அதற்கு, அங்கே இருக்கக்கூடியவர்களிடம் எதிர்ப்பு இருப்பதாக நீங்கள் எங்களிடத்திலே கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்யச் சொல்லி, புரட்சி தலைவி அம்மா அவர்கள் அங்கே மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, அங்கே தேவைப்படுகின்ற தேவையான நடவடிக்கைகளை புரட்சி தலைவி அம்மாவுடைய அரசு எடுக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்பதைச் சொல்லி, இப்பொழுது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது எல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்தான். புரட்சி தலைவி அம்மா அவர்கள்தான், இந்திய அரசியல் வரலாற்றிலே இல்லாத வகையிலே, நான் மீண்டும் சொல்கிறேன். வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற அனைத்து கட்டடங்களுக்கும் சொந்த கட்டடங்களை உருவாக்கித் தர வேண்டுமென்று புரட்சி தலைவி அம்மா அவர்கள் (மேசையைத் தட்டும் ஒலி)

377 கட்டடங்களை கடந்த 5 ஆண்டுகளில், இவதுவரை இருந்த எந்த செய்யாத வகையிலே, 377 கட்டடங்கள் 380 கோடி ரூபாய், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வருவாய் துறை கட்டடங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து தந்திருக்கின்றார்கள் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Add Comment