மாடு விவகாரம்: மோடி பேச்சின் அர்த்தம் என்ன..?

மாடு விவகாரம்: மோடி பேச்சின் அர்த்தம் என்ன..?

“இரவில் சமூகவிரோதிகள், பகலில் கோ ரக்க்ஷகர்கள்” என்று பசு பாதுகாப்பு
படையினரை வருணித்திருக்கிறார் மோடி. அப்படியெனில் குஜராத், ஹரியானா
போன்ற மாநிலங்களில் இயங்கும் அந்தப் படைகளை தடைசெய்து, அவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்குள்ள பாஜக அரசுகள். செய்யுமா? அப்படி
செய்யாதவரை உ பி தேர்தலை மனதில் வைத்து தலித்துகளை சமாதானப்படுத்த
பார்க்கும் மாய்மாலப் பேச்சாகவே இதை கருத வேண்டியிருக்கும். மாட்டுக்கறி விவ
காரம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது தலித்துகளுக்கு எதிரானதாகவும் இருப்பது
பாஜக வின் “இந்து அரசியல்” வருணாசிரமவாதிகளின் அரசியலே என்பதை அம்ப
லப்படுத்துகிறது. ஆகவேதான் உ பி தேர்தல்வரை அடக்கி வாசிக்க சொல்கிறார்
மோடி. மாடு விவகாரம் முஸ்லிம் வெறுப்புணர்வை கிளறுவதாக இருந்தால் அது
இப்போதும் அவருக்கு ஏற்புடையதே. அதனால்தான் “ராஜாக்களுக்கும் பாதுஷாக்க
ளுக்கும் இடையிலான போர்களில் பாதுஷாக்கள் பசுக்களை முன்னிறுத்தி போரி
ட்டபோது அவற்றை கொல்ல மனமின்றி ராஜாக்கள் தோற்று போனார்கள்” என்றும்
அவர் பேசியது.(டிஒஐ ஏடு) ஏதோ வரலாற்று பேராசிரியர் போல அடித்து விட்டிருக்கி
றார். எத்தனை போர்களில் பாதுஷாக்கள் இந்த தந்திரத்தை பயன்படுத்தினார்கள்,
எத்தனை போர்களில் இதனால் ராஜாக்கள் தோற்றுப்போனார்கள் என்கிற விபரத்
தை வரலாற்று ஆதாரத்துடன் வெளியிடத் தயாரா மோடி? பாஜகவின் தொண்டர்
ஒருவர் இப்படி வாய்க்கு வந்தபடி பேசலாம். ஆனால் நாட்டின் பிரதமர் இப்படி பேசக்
கூடாது. அது நாட்டின் மரியாதையை குலைத்துவிடும்.

FB_IMG_1470642693249முதல் படத்தில் பசு காவலர்கள் ஒருவரை அடித்து துன்புறுத்தி தங்கள் காலடியில் வைத்திருக்கிறார்கள், அடுத்த படத்தில் அதே நபர் அமித் ஷாவுடன் இருக்கிறார். பசு காவலர்கள் எனும் பெயரில் இப்படி பெருமிதமாக படங்கள் போட்டிருப்பவர்களின் முகநூல் பக்கங்களில் பார்த்தால் அவர்கள் பாஜக தலைவர்கள் ஹேமா மாலினி முதல் மோடி வரை அனைவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்கள்.

மோடியும் இந்த கயவர்களும் ஒரே தத்துவத்தால் வளர்க்கப்பட்டவர்கள் தானே, இதே மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பசு பாதுகாப்பை பற்றி பேசி இந்த பொடியன்களை உசுப்பேத்திவிட்டவர் தானே?? மோடி இப்பொழுது நீலிக் கண்ணீர் வடித்து இதில் யாரை தண்டிக்கப் போகிறார்?

Add Comment