கடையநல்லூர் அருகே மீண்டும் விபத்து…

மீண்டும் விபத்து . கடையநல்லூர் இடைகால் அருகே மீண்டும் விபத்துஅரசு பஸ்ஸும் வேனும் மோதல்
5 பேர் காயம்!

கடையநல்லூர் .ஆகஸ்ட் 8. சத்தமியமங்கலம் திருநர் வாசலை சார்ந்த தண்டாயுதபாணி (57) வாடகை மாருதி வேனில் குடும்பத்துடன் நேற்றைய தினம் குற்றாலத்தில் குளித்து விட்டு இன்று காலை 11மணிக்கு சத்தமியமங்கலம் நோக்கி செல்லும் போது இடைகால் அருகே எதிரே மதுரையிலிருந்து பாபனாசம் செல்லும் அரசு பேருந்து மாருதி வேன் மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வேனில் பயணித்த 5பேர் காயமடைந்தனர் அதன் விபரம் தண்டாயுதபாணி (57) தண்டாயுதபாணி மனைவி ஜோதி (46)ஆனந்தராஜ் மனைவி சுதா (42) மகேஷ்வரி(40) வேன் டிரைவர் துரைச்சாமி (62) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததன இதில் துரைச்சாமி மகேஷ்வரி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் விபத்து குறித்து இலத்தூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

FB_IMG_1470648482570

Add Comment