முஸ்லீம் லீக் அதிமுக கூட்டணியில் இணைய திட்டமா?

சமீபத்தில் சட்டமன்த்தில் பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்கள் தாலுகா அலுவலகம் கடையநல்லூரில் மைய்ய பகுதியில் அமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையயை வலியுறுத்தி பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர், தாலுகா அலுவலகம் ஊரின் மைய பகுதியில் அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை குறிப்பிட்டார். ஆனால் இது எந்த நிலையில் இப்பொழுது உள்ளது என்பது பற்றிய முழு விவரம் தெரியவில்லை.

கடையநல்லூர் மைய பகுதியிலேயே அமையுமா அல்லது வேறு எங்காவது காசித்தர்மம் பகுதியில் அமையுமா என்பது இன்னும் மக்கள் மத்தியில் கேள்வி குறியாகத்தான் உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு நன்றி கூறி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளார்.

சரி இதில் என்ன உள்ளது, நல்ல விஷயம் தானே என கருதினால் அங்குதான் பிரச்சனை .

பச்சை கலரில் போஸ்டர் அடித்து கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் என்று போடுவதற்கு பதில் அதிமுக கட்சியினர் பயன்படுத்தும் “அம்மா” என்ற வார்த்தையால் வாழ்த்தி உள்ளனர்.

இது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவினருக்கு எப்படி கலைஞ்சர் என்ற வார்த்தை பிடிக்காதோ அதை போல திமுகவினருக்கு அம்மா என்ற வாதையும் பிடிக்காத விஷயம்தான்.

இந்த போஸ்டர் யாரை திருப்தி படுத்த ஒட்டியுள்ளனர் என திமுகவினர் மத்தியில் கேள்வி கணைகள் தொடுக்கப்பட்டுள்ளது.

போக போக தெரியும் ….உள்ளாட்சி தேர்தல் வேறு வருகிறது…பொறுத்திருந்து பாப்போம்…

13895094_1250508028322718_7409549349689875124_n

Add Comment