கடையநல்லூரில் எந்த இடத்தில தாலுகா அலுவலகம்? மக்களை குழப்பும் அரசியல் காட்சிகள்.

FB_IMG_1470638887881

கடையநல்லூரில் எந்த இடத்தில தாலுகா அலுவலகம்? மக்களை குழப்பும் அரசியல் காட்சிகள்.

சமீபத்தில் சட்டமன்த்தில் பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்கள் தாலுகா அலுவலகம் கடையநல்லூரில் மைய்ய பகுதியில் அமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையயை வலியுறுத்தி பேசினார்.

சட்டமன்றத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் முழு தொகுப்பு

திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது அங்கே உள்ள Agriculture Marketting நிலையத்திற்கு சொந்தமான இடத்திலே இருக்கிறது. கடையநல்லூர் வட்டாட்சியிலே 32 வருவாய் கிராமங்களும், 2 நகராட்சிகளும் இருக்கின்றன. இதுவரை அங்கே சொந்தக் கட்டடம் இல்லாமல் இருக்கின்றது. எனவே, இந்த அலுவலகத்தை நகர எல்லையிலேயே, ஊருக்கு வெளியில் கொண்டு போகாமல் நகர எல்லையிலேயே அமைந்து கொடுக்க வேண்டுமென்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாயிலாக இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன். அதற்கு திட்டம் இருக்கின்றதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர்: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்,

மாண்புமிகு திரு ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன கடையநல்லூர் புதிய வட்டம் என்பது புரட்சி தலைவி அம்மா அவர்கள் 110 விதியின் கீ உருவாக்கித் தரப்பட்ட புதிய வட்டம். அது தற்போது வடாகைக் கட்டடத்திலே இயங்கி வருகிறது. அதை நகரத்தின் வெளிப்பகுதியிலே கொண்டு போகக்கூடாது என்கின்ற கோரிக்கையை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலே அங்கே இருக்கக் கூடிய நிலத்தை ஆய்வு செய்து, அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்கின்றார்கள். அந்த வகையிலே, நம்முடைய புதிய வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் அல்ல, அங்கே பல அரசு அலுவலக கட்டடங்கள் உருவாக்குகின்ற வகையிலே ஒரு இடத்தை பரிந்துரை செய்திருக்கின்றார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏற்கனவே அதற்கு, அங்கே இருக்கக்கூடியவர்களிடம் எதிர்ப்பு இருப்பதாக நீங்கள் எங்களிடத்திலே கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்யச் சொல்லி, புரட்சி தலைவி அம்மா அவர்கள் அங்கே மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, அங்கே தேவைப்படுகின்ற தேவையான நடவடிக்கைகளை புரட்சி தலைவி அம்மாவுடைய அரசு எடுக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்பதைச் சொல்லி, இப்பொழுது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது எல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்தான். புரட்சி தலைவி அம்மா அவர்கள்தான், இந்திய அரசியல் வரலாற்றிலே இல்லாத வகையிலே, நான் மீண்டும் சொல்கிறேன். வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற அனைத்து கட்டடங்களுக்கும் சொந்த கட்டடங்களை உருவாக்கித் தர வேண்டுமென்று புரட்சி தலைவி அம்மா அவர்கள் (மேசையைத் தட்டும் ஒலி)

377 கட்டடங்களை கடந்த 5 ஆண்டுகளில், இவதுவரை இருந்த எந்த செய்யாத வகையிலே, 377 கட்டடங்கள் 380 கோடி ரூபாய், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வருவாய் துறை கட்டடங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து தந்திருக்கின்றார்கள் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் எந்த சூழ்நிலையிலும் நகரின் மையப்பகுதியில் கண்டிப்பாக அமையும் என்ற உத்திரவாதம் அரசின் சார்பில் சொல்லப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் கடையநல்லூரில் அரசியல் காட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில், எண்களின் முயற்சியால்தான் நடந்தது என்று தம்பட்டம் அடித்து வருவது ஒரு புறம் இருக்க.

கடையநல்லூர் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ஒருபடி மேல சென்று கடையநல்லூர் தாலுகா நகரின் மைய்ய பகுதியில் அமைய உடனடியாக நடவடிக்கை எடுத்த அம்மா அவர்களுக்கு நன்றி என பாராட்டு போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரோ அல்லது வருவாய் துறை அமைச்சரோ எந்தவித உறுதி மொழியும் கொடுக்கவில்லை மேலும் எந்த இடம் என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.

போஸ்ட்டர் அடித்து கொண்டாடுவதை விட்டு விட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் எந்த இடம் என்று தெளிவாக மக்களிடம் வீக்கம் அளிக்க வேண்டும் என்பதே இன்றைய நல்லூர் மக்களின் ஆவல்….

கடையநல்லூர் MLA மற்றும் அரசு அதிகாரிகள் இது பற்றி பதில் கூறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments

comments

Add Comment