கடையநல்லூரில் தண்ணீருக்காக ஏங்கும் மக்களும் தூங்கும் நிர்வாகமும் !

தண்ணீருக்காக ஏங்கும் மக்களும் தூங்கும் நிர்வாகமும் !

நேற்று 13.08.2016 சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விசேஷ அனுமதி பெற்று கடையநல்லூர் எம் எல் ஏ. அபூபக்கர் அவர்களும் நானும், நண்பர் கட்டாஃபி அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்.

அப்போது கடையநல்லூரில் நிலவி வரும் தண்ணீர்த் தட்டுப்பாடுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் எம் எல் ஏ விளக்கமாக எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் உங்களூர் கமிஷனர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அப்படி எந்த தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை என்றும் சொன்னாரே என்று கூறினார்.

இடைமறித்த எம் எல் ஏ பதினான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விடப்படுகிறது என்று விளக்கமளித்தார். நான் கவனித்து ஆவன செய்கிறேன் என்று மாவடடத்தலவர் உறுதியளித்தார். மேலும் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகரின் மையயப்பகுதியில் அமைத்திட உறுதுணை புரிந்ததற்காக நன்றி கூறி சால்வை அணிவித்தார்.

வெளியில் வந்ததும் கடையநல்லூர் நகரசபை ஆணையரை கைபேசியில் அழைத்து அவர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் பொய்யான தகவலை தெரிவித்ததற்காக மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் எம் எல் ஏ.
கடையநல்லூரில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இயற்கையானது அல்ல ; செயற்கையான ஒன்றாகும்.

கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏற்கெனவே உள்ள இரண்டு கிணறுகள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன. அவற்றினை தூர்வாரி மின் மோட்டார்கள் பொருத்தினால் கடையநல்லூருக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் தூக்கம் கலைத்து முனைப்போடு செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் தண்ணீர் தட்டுப்பாடு முற்றிலுமாக களையப்படும்.

அந்தக் கிணற்றினைப் பார்வையிட்டு தேவையான பணிகள் நடக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப் போவதாக எம் எல் ஏ அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தூங்கும் நகராட்சி நிர்வாகத்தையும் கமிஷனரையும் கண்டித்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்திடவும் தீர்மானித்துள்ளார் .

Mustafa kamal

Add Comment