கடையநல்லூர் நகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட கோரிக்கை மனு

கடையநல்லூர் நகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட கோரிக்கை மனு

பெறுனர் 17.08.2016
உயர்திரு ஆணையர் அவர்கள்
நகராட்சி அலுவலகம்
கடையநல்லூர்

அனுப்பு:
பொதுமக்கள்
கடையநல்லூர்

மரியாதைக்குரிய ஐயா !

பொருள் : கடையநல்லூரில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு சம்பந்தமாக

கடந்த சில மாதங்களாக கடையநல்லூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் போதுமான அக்கறை காட்டவில்லை என்று அறியவருகிறோம்.

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடையநல்லூரில் எந்தத் தண்ணீர் தட்டுப்பாடும் இல்லைஎன்று தாங்கள் பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மூலம் அறியவருகிறோம்.

தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்குண்டான வழிவகைகளை தேடுவதை விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொய்யான தகவலைத் தெரிவித்தமைக்காக உங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பொது மக்களின் கோரிக்கைகள் எவற்றினையும் களைந்திட தாங்கள் எந்த உருப்படியான முயற்சிகளையும் மேற்கொள்ளுவதில்லை என்றும், நகராட்சிக்குட்பட்ட எந்த இடத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்ளுவதில்லை என்றும் அறியவருகிறோம். இதனையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த மந்தப் போக்கு தொடருமானால் முதலமைச்சரின் தனி பிரிவின் கவனத்திற்கு உங்களின் செயல்படாத நிலையை விளக்கி கடையநல்லூர் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துடன் கையெழுத்து இயக்கம் நடத்தி புகார் தெரிவிக்க தீர்மானித்துள்ளோம்.

நன்றி

இப்படிக்கு
ஊர்ப்பொதுமக்கள்

Add Comment