சீவலங் கால்வாய் தூர் வரப்பட்ட செய்தி…மோதி கொள்ளும் இயக்கங்கள்.

கடையநல்லூரின் முக்கிய கால்வாய்களில் ஓன்றான சீவலங் கால்வாய் தூர் வாரப்படாமல், மழைக் காலங்களில் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கரைகளை உடைத்து மதினா நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுவதால் மக்களை கடும் சிரம்மத்திற்கு உள்ளாகி வந்ததனர்.

கடந்தாண்டு மதினா நகரை வெள்ளம் சூழ்ந்த போது அதை சரிசெய்ய வலியுறுத்தி கடையநல்லூரில் உள்ள சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள் போராட்டம் நடத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் நிலையயை விளக்கினார்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் SDPI போன்ற இயக்கங்கள்  முக்கிய பங்காற்றின.இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் மழைகாலம் முடிந்ததும் மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லி பொதுபணி துறை சார்பில் சீவலான் கால்வாய் தூர்வார படும் என வாக்குறுதி அளித்தனர்.

இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் சீவலான் கால்வாய் தற்போது தூர்வாரப்பபட்டது.ஆனால் கிழக்கு மேற்கு பகுதிகளில் இன்னும் முழுமையாக தூர்வாரப்படவில்லை.

இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சரி நாம விஷயத்திற்கு வருவோம். இப்ப யாரு போராட்டத்தினால் இந்த வெற்றி கிடைத்தது. அதாவது எந்த இயக்கத்தினரின் போராட்டத்தினால் இந்த சீவலான் கால்வாய் தூர்வாரப்பட்டது.

இப்ப அது தான் நம்ம ஊர்ல ரெம்ப முக்கியம் சார்.

யாரா இருந்தா என்ன… இது நடந்ததால் மக்களுக்குத்தான் நல்லது.
விட்டுட்டு வேலைய பாருங்க அப்டீன்னு நினச்சா.

இரண்டு இயக்கங்களும் போட்டி போட்டு டிவி பேட்டி , செய்தின்னு முகப்பக்கத்துல கலக்குறாங்க.

ரெண்டு பேர்கிட்டையும் விசாரித்தால் …

நாங்க பண்ண போராட்டம்தான் இதற்க்கு காரணம்னு சொல்லி ஆதாரம் காட்டுறாங்க.

நமதூரில் இந்த இரு பெரும் இயக்கங்களால் கடையநல்லூர் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இதை மறுப்பதற்கு இல்லை.

இதில் யார் பெரியவன் என்ற போட்டியை விட்டுவிட்டு, இது கடையநல்லூர் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதே நன்றாக இருக்கும் என்பதே பெருபான்மையான நல்லூர் மக்களின் கருதும் கூட.

இறுதியில் இதை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறோம்.

IMG-20160816-WA0006 IMG-20160816-WA0007 IMG-20160816-WA000913938469_1091046697640885_6403584439750104690_n 14034684_1091046667640888_7978692669736571072_n 14034763_1091046720974216_3331890043056069747_n

Add Comment