வெற்றியுடன் துவக்குமா பிரான்ஸ் அணி!: இன்று உருகுவேயுடன் மோதல்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய பரபரப்பான லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், உருகுவே அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. இதில் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று கேப்டவுனில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் “ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் அணி, உருகுவேயை எதிர்கொள்கிறது.
ஹென்றி பலம்:
பிரான்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த 1998ல் சொந்த மண்ணில் கோப்பை வென்றது. பின் 2006ல் கேப்டன் ஜிடேன் கைகொடுக்க, பைனலுக்கு முன்னேறியது. இதில், இத்தாலி வீரர் மாட்டராசி-ஜிடேன் மோதல் சர்ச்சை ஏற்படுத்த, பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது. இதற்கு இம்முறை பரிகாரம் தேட காத்திருக்கிறது. ஜிடேன் ஓய்வு, மற்றும் துர்ராம், பாட்ரிக் வியர்ரா, கிளாட் மெக்கலிலே போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாதது பெரும் பின்னடைவு. அனுபவ தியரி ஹென்றியை தான் அதிகம் சார்ந்துள்ளது. உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக கையால் கோல் அடித்து பிரச்னை ஏற்படுத்திய இவர், கவனமாக ஆட வேண்டும். இவரை தவிர, டேவிட் காலாஸ், மலூடா, எவ்ரா, ரிபரி ஆகியோர் கைகொடுத்தால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம். பயிற்சியாளர் ரேமண்ட் டொமனேசின் சிறந்த யுக்திகள் பிரான்ஸ் அணிக்கு பக்கபலமாக அமையும்.
உருகுவே பலவீனம்:
கடந்த 1930ல் உலக கோப்பை தொடர் துவங்கப்பட்ட போது உருகுவே அணி முதன் முதலில் சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து 1950ல் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு பின் பெரிதாக சாதிக்கவில்லை. இம்முறை முன் கள வீரர்களான டியாகோ போர்லான், லூயிஸ் சாரஸ் ஆகியோரது அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து களமிறங்குகிறது. இவர்களை பிரான்ஸ் அணி சமாளிக்க தவறினால், அதிர்ச்சி முடிவை சந்திக்க Levitra online நேரிடும். உருகுவே அணியின் கோல்கீப்பிங் உட்பட தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக உள்ளது.
இரண்டு முறை:
உலக கோப்பை அரங்கில் உருகுவே-பிரான்ஸ் அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. கடந்த 1966ல் நடந்த போட்டியில் உருகுவே அணி, பிரான்சை 2-1 என வென்றது. பின் 2002ல் நடந்த போட்டி டிராவில்(0-0) முடிந்தது.
சாதிக்குமா தென் ஆப்ரிக்கா
உலக கோப்பை தொடர் இன்று “கிப்-ஆப்’ ஆகிறது. முதல் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. “ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இவ்விரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடக் கூடும்.
சொந்த மண்ணில் சாதித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்ரிக்கா களமிறங்குகிறது. முன்கள வீரர்கள் காட்லிகோ மெபிலா, மசிலேலா, சிபாயா நம்பிக்கை தருகின்றனர். அனுபவ பயிற்சியாளர் கார்லஸ் பெரேரா அணியின் மிகப் பெரும் பலம். இது வரை போட்டியை நடத்திய நாடு முதல் போட்டியில் தோற்றதில்லை. இந்த பெருமையை காக்க வேண்டிய நிலையில் தென் ஆப்ரிக்கா உள்ளது.
உலக கோப்பை அரங்கில் அனுபவம் வாய்ந்த மெக்சிகோ தற்போது வலிமையான அணியாக உள்ளது. ஹெர்ணான்டஸ், ஆன்ட்ரஸ் குவார்டாடோ, கியாவானி டாஸ் சான்டாஸ், கார்லஸ் வேலா போன்றவர்கள், தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்க காத்திருக்கின்றனர்.
உலக கோப்பை தொடருக்கு தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக தகுதி பெறுகிறது. மெக்சிகோ அணிக்கு இது 14வது முறை. இதற்கு முன் நடந்த 3 சர்வதேச போட்டியில் மெக்சிகோ 2, தென் ஆப்ரிக்க அணி ஒன்றில் வென்றுள்ளன. உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.
துவக்க விழாவில் மண்டேலா
தென் ஆப்ரிக்கா- மெக்சிகோ போட்டிக்கு முன்பாக, உலக கோப்பை துவக்க விழா, ஜோகனஸ்பர்க்கில் உள்ள “சாக்கர் சிட்டி’ மைதானத்தில் நடக்கிறது. இன்று மாலை 5.30 மணி அளவில் துவங்கும் இவ்விழாவுக்காக மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1500 கலைஞர்களின் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சிகள் களை கட்ட உள்ளன.
தென் ஆப்ரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடியவரும் முன்னாள் அதிபருமான 91 வயது நெல்சன் மண்டேலா இவ்விழாவில் கலந்து கொள்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. “பிபா’ தலைவர் செப் பிளாட்டர் உள்ளிட்ட உலகின் பல வி.ஐ.பி.,கள் கலந்து கொள்கின்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சியில் ஹக் மசகேலா, ஆர். கெல்லி உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பாடல்கள் பாடுகின்றனர்.
வாகா…வாகா ஷகிரா
உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான “வாகா…வாகா ஆப்ரிக்கா’ என்ற பாடலை பிரபல பாப் பாடகி ஷகிரா, பாடி அசத்த உள்ளார். உள்ளூர் குழுவினருடன் சேர்ந்து, தனது வழக்கமான இடுப்பு அசைவுகளுடன் ஆடிப் பாடி ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளார்.

Add Comment