கடையநல்லூரில் விழிப்புணர்வு ஒத்திகை.பெற்றோர்களே பிள்ளைகளே கொல்லதீர்கள்!

பெற்றோர்களே பிள்ளைகளே கொல்லதீர்கள்!
படிக்கும் வயதில் பறக்கும் பைக் எதற்கு!!
கடையநல்லூரில் விழிப்புணர்வு ஒத்திகை ஏற்படுத்தி விளாசல்!

கடையநல்லூர் ஆகஸ்ட் 18. நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
கடையநல்லூரில் தொடரும் விபத்துகளை தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை ஏந்தி விபத்து ஒத்திகையை பொது மக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர அணியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடையநல்லூரில் நித்தமும் தொடரும் விபத்துகளால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கடையநல்லூரை மட்டுமின்றி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 பேருக்கு மேல் பலியாகியுள்ள சம்பவம் பெரும் கவலையளித்தாலும், சாலை விதிகளை உணர்ந்து வாகனம் ஒட்ட வேண்டும் மது அருந்தி வாகனம் ஒட்டக் கூடாது, ஒரே பைக்கில் இருவருக்கு மேல் செல்லக் கூடாது, இரு சக்கர வாகன ஒட்டிகள் அவசியம் தலைக் கவசம் அணிய வேண்டும் என அரசு பல்வேறு வகையில் பொது மக்களை கேட்டுக் கொண்டும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பல்வேறு யுக்திகளை கையாண்டாலும் விபத்துகள் என்னவோ தொடர் கதையாகவே உள்ளன.

> பறக்கும்பைக்.

எடுத்ததற்கெல்லாம் போலீசை குறை கூறி என்ன பயன் என யோசித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பஜார் சார்பில் வாகன விபத்தில் மரணிக்கும் நிகழ்விற்கு பொற்றோர்களும் ஒரு காரணம் எனக் கூறி பள்ளி மாணவர்ளோடு ‘’ பொற்றோர்களே பிள்ளைகளைக் கொல்லாதீர்கள்’’ ‘’படிக்கும் வயதில் உயிரைக் குடிக்கும் பறக்கும் பைக் எதற்கு’’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்திஇதை தடுக்கும் விதத்தில் தமி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை சார்பில் ஆஸ்பத்திரிபேரூந்து நிலையம் ,மனிக்கூண்டு , மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிளில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வ வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது உம்மையை போன்று விபத்து ஒத்திகை காட்சிகளை நடித்தும் காட்டிர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது தாஹா, செய்யது மசூது, ஜாஹீர், கடையநல்லூர் அனைத்து கிளை கிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், மைதீன், பாதுஷா,அமீன் ,சிராஜ் ,ஜப்பார், அப்துல்லாகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர் சாலை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவஅணியினர் உட்படநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
✍ படம் செய்தி குறிச்சி சுலைமான்

FB_IMG_1471528959161

FB_IMG_1471528955912

FB_IMG_1471528938686

FB_IMG_1471528934040

FB_IMG_1471528926669

FB_IMG_1471528920860

FB_IMG_1471528917588

FB_IMG_1471528914674

FB_IMG_1471528910959

FB_IMG_1471528906691

Add Comment