திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது-MLA அபூபக்கர்

தி.மு.க. உறுப்பினர்கள் 80 பேரை அவையிலிருந்து ஒரு வாரத்திற்கு நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது இ.யூ. முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேட்டி

தி.மு.க. உறுப்பினர்கள்n 89 பேரை அவையிலிருந்து ஒரு வாரத்திற்கு நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என இ.யூ. முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது-

இன்றைய தமிழக சட்டப் பேரவை நிகழ்வு எங்களுக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
நேற்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். அவை நடவடிக்கைகள் சுமுகமாக இருக்க வேண்டும், அனைத்து உறுப்பினர்களும் அவையில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான தளபதி ஸ்டாலின், தி.மு..க. உறுப்பினர்கள் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதற்கு வருத்தப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். தேவையானால் மன்னிப்பு கேட்கத் தயார் என பேசினார்.
இன்றும் அ.தி.மு.க. உறுப் பினர் நமக்கு நாமே நிகழ்ச்சி யில் விமர்சித்து பேசினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரினார்.
அப்போது அவைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் தளபதி அவர்கள், நமக்கு நாமே திட்டம் குறித்து விமர்சித்தா லும் பரவாயில்லை. முதல்வரே கூட அவர்களது கட்சி கூட்டத் தில் பேசியிருக்கிறார்.

எனவே, தொடர்ந்து அவையை நடத்துங்கள் என்று பெருந்தன்மையுடன் தெரிவித் தார்.
ஆனால், எந்த அசம்பாவித மும் நடக்காத நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.முக.வின் 80 உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்கு அவை யிலிருந்து நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதாகும்.
மக்கள் பிரதிநிதிகள் ஜன நாயக கடமையை நிறைவேற்று வதிலிருந்து தடுக்கும் செயல் ஆகும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் பெருந் தன்மையோடு நடந்து கொண்டதற்கு, அவைத் தலைவர் கொடுக்கும் தண்ட னையா இது? என்பதுதான் எங்களது கேள்வி.
நாளை சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களும், நானும் பங்கேற்று எங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்று வோம்.
இவ்வாறு கே.ஏஎ.ம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்.

Add Comment