கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம்

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சீரான குடிதண்ணீர் வழங்க கோரிநகராட்சி முன்பாக காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு போராட்டம் வரும் திங்கள்கிழமை(22.8.16) மாலை 5 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி முன்பாக காலிகூடங்களுடன் தண்ணீர் கேட்டு போராட்டம் நடைபெறவிருக்கிறது.இறுதியில் தண்ணீர் பானைகளை உடைத்து விட்டு கழுதையிடம் மனு கொடுத்து விட்டு போராட்டம் முடிக்கப்படும்.

அனைத்து சகோதரர்களும் தவறாது கலந்துகொள்ளவும்.சகோதரிகளை இந்தபோராட்டத்தில் அதிகமதிகம் கலந்துகொள்ள செய்யவும்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்தால் சகோதர,சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொள்ளவும்.

இப்படிக்கு

கடையநல்லூர் அனைத்துகிளைகள்
நெல்லை மேற்கு மாவட்டம் .

Add Comment