கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில்காயிதே மில்லத் திடலில் மழைத் தொழுகை

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில்காயிதே மில்லத் திடலில் மழைத் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

கடையநல்லூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தென்மேற்கு பருவக் காற்று மூலம்வருடந்தோறும் பெய்யும் மழை இந்த வருடம் பொய்த்து விட்டதால் கடும் வறட்சிநிலவுகிறது. மேலும் நமதூரில் நிலத்தடி நீரின் அளவும் கணிசமாகக் குறைந்துவிட்டது.போதிய அளவு குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதை நாம்அனைவரும் அறிவோம். மழையை வழங்கக் கூடிய வல்ல இறைவனிடம் மன்றாடிக்கேட்பதே இதற்கான ஒரே தீர்வு என நமது ஜமாஅத் முடிவெடுத்துள்ளது.

எனவே, மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் காயிதே மில்லத்திடலில் மழை தொழுகை தொழுவதற்கு 21.08.2016 (ஞாயிறு) அன்று விரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்தஇஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ஆயிரக்கணக்கில்தொழுகைத் திடலை நோக்கி வரத் துவங்கினர்.

கடையநல்லூர் காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில்கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகத்தைச் சார்ந்த மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமத்உமரீ அவர்கள் இறைவனிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து பின்னர் மழைத்தொழுகை நடத்தினார். முன்னதாக அவர் மழைத் தொழுகை பற்றி மக்களுக்கு விவரித்துசொல்லும் போது ‘மக்கள் தாங்கள் செய்த பாவங்களிலிருந்தும் இறைக் கட்டளையைமீறும் போக்கிலிருந்தும் விலகி இறைவனிடம் மன்னிப்புக் கோரி அவனிடம் மனமுருகிமழையை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். ‘, என்று அறிவுறுத்தினார்.

கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும்திரளாகக் கலந்து கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோரி மழையைவேண்டினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி நிர்வாகிகள்சிறப்பாகச் செய்திருந்தனர். இத்தொழுகையில் மஸ்ஜித்முபாரக் கமிட்டி,அக்ஸா டிரஸ்ட், தக்வா,ஆயிஷா பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே!

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

Add Comment