கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே தாலுகா அலுவலகம்

நான் சட்டமன்றத்துல பேசி விட்டு போற ஆளு கிடையாது என்று அதன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் அவர்கள்.

சட்டமன்றத்தில் தாலுகா அலுவலகம் பற்றிய பேசி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கை என்னவென்று கேட்டறிந்து, மாவட்ட கலெக்டரிடமும் இது சம்பந்தமாக பேசி அடுத்தடுத்த வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடையநல்லூரில் தாலுகா அலுவலகத்திற்கு உகந்த இடமான அட்டைக்குளம் எதிரே உள்ள பகுதி மற்றும் தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் ஒழுங்கு நிலை விற்பனை கூட இடம் என இரண்டு இடங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்து ஆவண செய்யுமாறு கொட்டு கொண்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களையும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களை பார்வையிட்டு ஆயுவு மேற்கொண்டார்.

WhatsApp Image 2016-08-21 at 8.06.46 PM WhatsApp Image 2016-08-21 at 8.06.47 PM WhatsApp Image 2016-08-21 at 8.06.45 PM

Add Comment