அம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா ? கடையநல்லூர் MLA விளக்கம்

கடையநல்லூர்க தாலுகா அலுவலகம் ஊரின் எல்லையிலேயே அமைக்க ஆவண செய்யபப்டும் என தெரிவித்த  தமிழக  முதலமைச்சர் ,வருவாய்த்துறை வருஅமைச்சர் மற்றும்  சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் வாழ்த்து போஸ்டர் அடித்தனர்.

இந்த போஸ்டரில் இடம்பெற்ற “அம்மா” எனும் வார்த்தை திமுக வினர் மற்றும் இந்திய யூனியன் உறுப்பினர்களுக்கிடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை காட்டினார்.

இதற்க்கு விளக்கம் அளிக்கும் விதமாக, சமீபத்தில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கீழ்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

அம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா ?

கடையநல்லூர் எம் எல் ஏ விளக்கம்


(சமுதாய மக்கள் ரிப்போர்ட் ஆகஸ்ட்-19-25, 2௦16)

மக்கள் ரிப்போர்ட் : கடையநல்லூரில் தாலுகா அலுவலகம் அமைக்க தமிழக அரசு ஒத்துக்கொண்டதற்கு தங்கள் தொகுதியில் அம்மாவுக்கு நன்றி என்று முஸ்லிம் லீக் சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே ?

அபூபக்கர் MLA: இதில் என்ன தவறு இருக்கிறது ? இது இஸ்லாம் காட்டிய அணுகுமுறைதானே ?இஸ்லாமிய அடிப்படையில் என்ன தவறு இருக்கிறது ?

ஏதாவது “ஷிர்க்”கான வாசகங்கள் இருக்கிறதா ? “மனிதனுக்கு நன்றிசெலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் . ‘ என்பது அனைவரும் அறிந்ததுதானே ?
கடையநல்லூர் தாலுகா , கடையநல்லூர், புளியங்குடி ஆகிய இரண்டு நகராட்சிகளையும் 32 வருவாய்க் கிராமங்களையும் உள்ளடக்கியது. தாலுகா அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. தேர்வு செய்யப்பட்ட இடம் ஊருக்கு வெளியே அதிகமான போக்குவரத்து வசதி இல்லாத பகுதியாகும். தாலுகா அலுவலகம் என்பது அன்றாடம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போகவேண்டிய இடம். பெண்களுக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.

இதற்காகத்தான் ஏற்கெனவே எடுத்தமுடிவை மறுபரிசீலனை செய்து ஊர் எல்லைக்குள் வைக்குமாறு சட்டமன்றத்தில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உடனடியாக ஏற்று ஊர் எல்லைக்குள் அலுவலகம் அமைப்பதாக முடிவினை அறிவித்தார்.
இந்த நல்ல விஷயத்திற்கு நன்றி சொல்லத்தானே வேண்டும் ? தொகுதி மக்கள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் தானே .

மக்கள் ரிப்போர்ட் : அதற்காக அம்மா என்று சொல்வது………..

அபுபக்கர் MLA : அம்மா என்பது ஷிர்க்கான வார்த்தையா ? ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தலைவரை அடைமொழி சொல்லித்தான் அழைக்கிறார்கள். தி மு க வினர் தங்கள் தலைவரை கலைஞர் என்றுதான் சொல்கிறார்கள். மறைந்த தி மு க தலைவர் அண்ணாதுரையை தி மு க வினர் அறிஞர் அண்ணா என்றுதான் சொல்லுவார்கள். காயிதே மில்லத் அவர்களும் “அறிஞர் அண்ணா” என்று மேடைகளில் பேசியபோதும் இப்படித்தான் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

இதற்குப் பதிலலளிக்கும் வகையில் ஒலிமுஹம்மது பேட்டையில் பேசுகிறபோது “பேரறிஞர் அண்ணா அவர்களே!” என்று விளித்துப் பேசினார். இது குறித்துக் கேட்டபோது “பேரறிஞர்” என்பது ஷிர்க்கான வார்த்தை இல்லையே. என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார். . நானும் அதையே கேட்கிறேன் .”அம்மா” என்ற வார்த்தை ஷிர்க் இல்லையே ! இதய தெய்வம் என்றால்தான் ஷிர்க்.

நன்றி : மணிச்சுடர்நாளிதழ் ஆகஸ்ட்19/2௦

Add Comment