கடையநல்லூரில் திடீரென குடிநீர் வேன் மூலம் விநியோகம்

கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் காட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில்.

இதனை உடனடியாக சமாளிக்கும் விதமாக இன்று கடையநல்லூரில் பல இடங்களில் வேன் மூலம் குடிதண்ணீர் வினியிகிக்க பட்டு வருகிறது.

மக்கள் போராட்டங்களை தவிடு பொடியாக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கூறி எங்கள் போராட்டம் சொன்னபடி நடக்கும் என கூறுகின்றனர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்.

கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு முழு பிண்ணனி என்ன?

நகராட்சியின் பொய்யான தகவலால் போராட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்.
நெல்லை மாவட்டத்தில் பெரிய நகராட்சிகளில் கடையநல்லூர் நகராட்சியும் ஒன்று52.25 சதுரம் கீலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும் இந் நகராட்சியில் 33வார்டுகளில் 29 ஆயிரம் குடியிருப்புகளும் அதில் 90ஆயிரத்தி334 பொதுமக்கள் வசித்து வருகிறார்கள் இவர்களின் தண்ணீர் தேவைக்காக நகராட்சி நிர்வாகம்13971 குடிநீர் இனைப்புகளை வழங்கி அதற்காக கருப்பாநதி குடிநீர் திட்டதின் மூலம் 35 இலட்சம் லிட்டடர் தண்ணீரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 35 இலட்சம் லிட்டர் தண்ணீரை பெற்று ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று குடிநீர் விநியோகம் செய்து வந்தது இதை பொதுமக்கள் நன்கு பயன் படுத்தி வந்தனர்

இருப்பினும் கூடுதலாக 171 பொது நல்லிகளும் 271 சின்டெக்ஸ் தடைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளையும் பொது மக்கள் வசதிக்காக நகரசபை நிர்வாகம் செய்துள்ளது. இருந்த போதும் நாளுக்கு நாள் விஸ்தரிப்படைந்து வரும் குடியிருப்புகளும், மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நகரசபை நிர்வாகத்திலிருக்க 2040 ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை பெருக்கத்தையும் அவர்களுக்கான குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த தி.மு.க. அரசின் போது 24 கோடி ரூபாயில் புதிய குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அந்தத் திட்டம் தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதற்காக அ.தி.மு.க.வின் புதிய அரசு 2011 ம் ஆண்டு அதைத்து தொடர்ந்து இன்று வரை அக்குடிநீர் திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்காமலும் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்நிலையில் புதிய குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் வடிகால் வாரியம் நகரின் முக்கிய இடங்களில் 2650 குடிநீர் இணைப்புகளை வெள்ளோட்டம் காண நடவடிக்கை மேற்கொண்டது. அதே போல் பெரும் வீதிகளில் உள்ள பழைய குடிநீர் வீட்டு இணைப்புகளை புதிய பகிர்மான குழாய்களில ஃ இணைக்க ஓப்பந்தம் செய்து பணிகளை மேற் கொண்டது.

இந்த ஒப்பந்த பணிகளை செய்ய வந்த சில சப்-காண்ட்ரக்டர்கள் சிலர் உள்ளூர் நகரசபை குடிநீர் பிரிவு ஊழியரின் ஒத்துழைப்போடு நிர்வாகத்திற்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் தெரியாமல் சுமார் 600க்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் இணைப்புகளை இணைப்பு ஒன்றிக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து வழங்கியுள்ளனர். இந்நிலையில் நகரசபை நிர்வாகமோ தான் வழங்கிய குடிநீர் இணைப்பிற்கு தண்ணீர் வினியோகம் செய்வதை மட்டும் கணக்கிட்டு ஒரு பொய்யான புள்ளி விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கும், நகர சபைகளின் உயரதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்து தனது கடமை முடிந்து விட்டதாக பொறுப்பற்ற முறையில் தட்டி கழித்து வருகிறது நகரசபை நிர்வாகம். ஆனால் உணைமையிலேயே திருட்டு தனமாய் வழங்கப்பட்ட 600 குடிநீர் இணைப்புகளுக்கு வினியோகிப்பப்படும் பதினோறு லட்சம் லிட்டர் குடிநீரையும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வெள்ளோட்டத்திற்காக பயன்பாட்டிலிருந்த 2650 குடிநீர் இணைப்புகளுக்கு வினியோகிக்கப்படும் 26 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் குடிநீரையும் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு குடிநீர் வினியோகத்தின் போதும் கட்டணமின்றி 36.5 லட்சம் விட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதை நகராட்சி நிர்வாகம் மறைத்துள்ளது. இதனால் நகரசபை நிர்வாக குடிநீர் வினியோகத்தில் ஏக தட்டுப்பாடும், குளறுபடியும்.
போரட்டம்.

நிலைமை இப்படியிருக்க நகரசபை நிர்வாகமோ குடிநீர் கட்டுப்பாட்டிற்கான முழு உண்மையை மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்ச்சிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் முறையாக முன் வைப்புத் தொகையும், மாதாந்திரக் குடிநீர்க் கட்டணம் செலுத்திய இணைப்புதாரர்கள் தற்போது சீராக குடிநீர் கிடைக்காமல் 25 தினங்களுக்கு ஒருமுறை ஏனோ தானோ அளவில் குடிநீர் கிடைக்கப் பெற்று வருகின்றனார். அதை நேரம் இக் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ )சார்பில் நகரசபையை முற்றுகையிட்டு மாலை 4மணிக்கு போரட்டம் நடத்துகிறது.

செய்தி குறிச்சி சுலைமான்

IMG-20160822-WA0005 IMG-20160822-WA0006

Add Comment