சோகம்,அவமானம், வெட்கக்கேடு!

சோகம்,அவமானம், வெட்கக்கேடு!

42 கிமீ மாரத்தான் ஓட்டபோட்டியின்போது,
ஓடுகின்ற வீரருக்கு உடலின் நீர்
வற்றி வலிமை குறைந்து வேகம் குறையும். எனவே,
ஒவ்வொரு 2.5கிமீக்கும் ஒலிம்பிக் கமிட்டி நீர்ப்பந்தல் அமைத்து
சம்பந்தப்பட்ட வீரர்களின் நாடுகள்
குடிநீர், ஸ்பாஞ்ச், குளுக்கோஸ் பிஸ்கட் முதலியவற்றை வழங்க
ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், அந்த பந்தல்களில்
மற்ற நாடுகளின் சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பொருட்களை
சம்பந்தப்பட்ட வீரருக்கு வழங்கினர்.
இந்தியருக்கான மேசையில் தேசியக்கொடி மட்டுமே இருந்தது. இதனால், நமது வீராங்கனை
8கிமீக்கு ஒரு முறை அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கமிட்டி யின் பந்தலில் தான்
நீர் அருந்த வேண்டியதாயிற்று.
மேலும் பந்தயமுடிவில் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார். நினைவு திரும்ப 3மணிநேரம் ஆகிவிட்டது.
மயக்கமுற்று கீழே விழுந்தபின்பும்
ஒலிம்பிக் கமிட்டி டாக்டர் தான்
சிகிச்சை அளித்திருக்கிறார்.
இந்திய டாக்டர் காணவே இல்லையாம்!
இந்திய அரசும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் விளையாட்டு வீரர்களைக்
கவனிக்கும் லட்சணம் இது தானா?

Add Comment