கடையநல்லூர் நகராட்சியில் மட்டமான நிர்வாகம்…நல்லூர் வாசியின் குமுறல்

வராத தண்ணீருக்கு வரி கட்ட க்யூவில் மணிக்கணக்கில் நின்றேன். ஒரேஒரு கவுண்டர் மட்டும் போட்டு வசூல் நடப்பதால் அங்கே நாலாவது ஆளாக ஒரு மணி நேரம் கால்கடுக்க நின்றால், வசூலிப்பவரின் பக்கவாட்டு கதவு வழியாக இடையில் செருகும் ஆபீஸ் நண்பர்களின் வேண்டுகோள் ஏற்று அவர்களுக்கு பில் போட்டு நாம் நிற்கும் வரிசையை மறந்துவிடுகிறார் வசூலிக்கும் சகோதரி.

ஏமாளியாக நம்மை உணர வைத்த வசூலாளர் குளிரூட்டப்பட்ட அறையில் எங்களின் மற்றும் அலுவலக நண்பர்களின் கூச்சலுக்கிடையில் சங்கடப்பட்டார்… எங்களின் காத்திருப்பு துயரம் கண்ட நகர்மன்ற உறுப்பினர் SDPI நயினாமுஹம்மது இன்னொரு கவுண்டர் போட்டு வசூலிக்க சொல்லி பல தடவை சொல்லிவிட்டேன் நடக்கவில்லை, என்ன செய்ய என வேதனைப்பட்டார்… மட்டமான நிர்வாகத்துடனான நகரசபை கடையநல்லூர் நகரசபை தான்…

abdullah

Add Comment