கடையநல்லூரில் தடையை மீறி போராட்டம்: அதிகாரிகளுக்கு ஒரு நீதி, அப்பாவி பொது மக்களுக்கு ஒரு நீதியா?

14054102_703061636511241_3363049465468347326_nஅரசு அதிகாரிகளுக்கு ஓரு நீதி அப்பாவி பொது மக்களுக்கு ஒரு நீதியா?

கடையநல்லூர் நகராட்சியில் நிலவி வரும் கொடுமையான குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அற வழியில் நகராட்சி அலுவலகம் முன்பு பானைகளை உடைத்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத ஜமா அதில் தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.
15 நாள், 20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது குறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ சட்ட சபையில் கேள்விகள் எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடையநல்லூர் பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போதுமான குடிநீர் விநியோகம் நடை பெறுவதாக பொய் தகவல்களை தெரிவித்தார்.

இதனால் கொதிப்படைந்த பொது மக்கள் உண்மை நிலையை உணர்த்தும் வகையில் அற வழியில் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கடையநல்லூர் போலிசார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு இதே போல் நெல்லை மாவட்டத்தில் 144 அமுலில் இருக்கும் போது கடையநல்லூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நகராட்சி ஆணையருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, ஆர்.டி.எம்.ஏ போன்ற உயர் அதிகாரிகள் பேச்சு வார்ததை நடத்தியும் நகராட்சி அதிகாரிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை. மாதக்கணக்கில் தண்ணீர் கிடைக்காத பொது மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது சட்டம் பாய்கிறது. குடிநீர் கிடைக்க வில்லை என்றால் ஆடு, மாடு போன்று கொத்து, கொத்தாக பொது மக்கள் சாகவேண்டும் என்று அரசு விரும்புகிறதா? குறைந்த பட்ச எதிர்ப்பை பதிவு செய்தால் கூட அப்பாவி பொது மக்கள் மீது வழக்கா? அதிகாரிகளுக்கு ஒரு நீதி, அப்பாவி பொது மக்களுக்கு ஒரு நீதியா?

Ganapathi Balan

Add Comment