கடையநல்லூர் நகராட்சியில் கஸ்டமர் சர்வீஸ்…நல்லூர் வாசியின் கலக்கல்

பலதரப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நகராட்சி நிர்வாகம் ஒரு கஸ்டமர் சர்வீஸ் செண்டரை ஆரம்பிப்பது போல நேற்று இரவு கனவு …

ஒருவேளை உண்மையிலேயே இது நடந்தால் எப்படி இருக்கும் ?
ஒரு சின்ன கற்பனை இதோ ….

மிஸ்டர் எக்ஸ் #குடிநீர்_பிரச்சனை தொடர்பாக நகராட்சியின் கஸ்டமர் கேர் நம்பரான 420 ஐ தொடர்பு கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம் ….

க்ரிங் க்ரிங் ….க்ரிங் க்ரிங் ….

“ஹலோ இன்னாங்கோ இங்க தண்ணி வரலை …”

(ரிக்கார்டட் வாய்ஸ் ஒலிக்கிறது)

“நகராட்சியின் சேவை மையத்தை தொடர்பு கொண்டதற்கு நன்றி …
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ….
ஹிந்தி கேலியே தோ தபா …
ஃபார் இங்லீஷ் ப்ரஸ் த்ரீ …
மலையாளத்துல சம்சாரிக்க ………

(அடப்பாவிகளா இங்கேயுமா என்று சலித்துக்கொண்டே எண் ஒன்றை அழுத்தினார் மிஸ்டர் எக்ஸ்)

ரிக்கார்டட் ஆடியோ தொடர்கிறது …

*சுகாதாரம் குறித்த பிரச்சனைகளுக்கு எண் ஒன்றை அழுத்தவும் …

*சாக்கடை தொடர்பான பிரச்சனைகளுக்கு எண் இரண்டை அழுத்தவும் …

*குடிநீர் தொடர்பான புகார்களுக்கு எண் மூன்றை அழுத்தவும் …

*கொசு மருந்து தொடர்பான …………………..

(பொறுமையிழந்த மிஸ்டர் எக்ஸ் இரண்டை அழுத்துகிறார்)

” நீங்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆப்சனை தேர்வு செய்துள்ளீர்கள் ….

*டவுண் பகுதிக்கு எண் ஒன்றை அழுத்தவும் …

*பேட்டை பகுதிக்கு எண் இரண்டை அழுத்தவும் ….

*மதினா நகருக்கு எண் மூன்றை …..

(அடேய் …
ஏன்டா கொடுமைபடுத்துறீங்க …
என்று எரிச்சலடைந்தவாறே எண் ஒன்றை அழுத்தினார் எக்ஸ்)

“*பழைய குழாய் பற்றிய தகவலுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ..

*புதுக்குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் எண் இரண்டை அழுத்தவும் …

*தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எண் 3 ஐ அழுத்தவும் …

*கருப்பாநதி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எண் 4 ஐ அழுத்தவும் …

(பழைய குழாய் பற்றி கேட்போம் என்று எண்ணியவாறே ஒன்றை அழுத்துகிறார் எக்‌ஸ் )

பழைய குழாயில் தற்போது தண்ணீர் விநியோகம் இல்லை …

*ஏன் இல்லை என்ற காரணம் அறிய எண் 1 ஐ அழுத்தவும் …

*எப்பொழுது தண்ணீர் வரும் என்று அறிய எண் இரண்டை அழுத்தவும் …

(வெறுத்துபோன மிஸ்டர் எக்ஸ் எதை அழுத்துவது என்று தெரியாமல் மௌனம் காக்கிறார் )

” நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை …
*இந்த தகவலை மீண்டும் கேட்க விரும்பினால் எண் 1 ஐ அழுத்தவும் ….
*மெயின் மெனுவுக்கு செல்ல ஸ்டாரை அழுத்தவும் …

*முந்தைய மெனுவுக்கு ஹேஷை அழுத்தவும்

*எங்கள் சேவை மைய அதிகாரியுடன் பேச எண் 9 ஐ அழுத்தவும்

(மிஸ்டர் எக்ஸ் முகத்தில் மகிழ்ச்சி …அவசரமாக எண் 9 ஐ அழுத்த மீண்டும் ஆடியோ தொடர்கிறது …)

*நகராட்சி ஆணையரிடம் பேச எண் ஒன்றை அழுத்தவும் …

*பூனையரிடம் பேச எண் 2 ஐ அழுத்தவும் …

*பானையரிடம் பேச எண் 3ஐ அழுத்தவும்

*கேணையரிடம் பேச எண் 4 ஐ அழுத்தவும் ….

(என்னது கேணையரா ?
அது யாருடா புதுசா இருக்கு …
அமுக்குடா 4 ஐ என்று எண்ணியவாறே நான்கை அழுத்த ஆடியோ இன்னும் தொடர்கிறது )

“நகராட்சியை பொறுத்தவரை எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் ஊழல் செய்ய அனுமதித்த நீங்கள் தான் கேணையன் ….
நீங்கள் உங்களுடனே தனக்கு தானே பேசிக் கொள்ளுங்கள் …

சேவை மையத்தை அழைத்தமைக்கு நன்றி ….

ஙீ … ஙீ …. ஙீ

Jafer Hafeez

Add Comment