கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி தொழுகை

கடையநல்லூரில் இந்த வருடத்தின் பருவமழை பொய்ததால் , பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது, நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் இன்று காலை சரியாக 6-30 மணிக்கு நபி வழியில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் தொழுகை நடைபெற்றது மழை தொழுகையின் பயனையும் ,
விளக்கத்தையு்ம மாவட்ட அழைப்பாளர் சதாம்உசேன் கூறி தொழுகை நடத்தினார்,  பிரார்த்தனையின் போது தங்கள் அனிந்திருந்த சட்டையை திருப்பி போட்டுக்கொண்டனர்

வழக்கமாக பிரார்த்திக்கும் முறைக்கு மாறாக கைகளை பூமியை நோக்கி திருப்பி நீட்டி இறைவனிடம் பிரார்த்தித்தனர் இதில் திரளானஆண்களும் பெண்களும்
தங்களுடைய கைகளை உயர்த்தி

அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.
ﺍஅல்லாஹும்ம அகிஸ்னானா !அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னானா
இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! என மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்

இதில் திரளான மக்கள் தொழுகையில் பங்கெடுத்தார்கள் நமது அனைவரின் பிரார்த்தனையை ஏற்று இறைவன் மழை பொழிவிப்பானாக..

செய்தி படம் குறிச்சி சுலைமான்

IMG-20160827-WA0006 IMG-20160827-WA0005 IMG-20160827-WA0003 IMG-20160827-WA0004 IMG-20160827-WA0002

Add Comment